Monday, August 11, 2008

சிரி..சிரி..சிரி..பாகம்-1

ஒரு நாள் எப்படியோ அதே கொசுவை சர்தார் பிடித்து விட்டார்.. கொசு தன் கதை முடிந்ததாக நினைக்க, சர்தாரோ அதற்கு விருந்து வைத்து சிறப்பித்தார்..

பின்னர் அதற்கு ஒரு மென்மையான படுக்கையை எற்பாடு செய்தார்..உபசரிப்பில் மயங்கிய கொசு, தூக்கத்தில் ஆழ்ந்திருக்க, அதன் காதருகில் சென்ற சர்தார் பாடினார்..

"" ங் கீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ""

அதிர்ச்சி அடைந்த கொசு அதே இடத்தில் மாரடைப்பால் மரணம் அடைந்தது..!
..........................

கொலைக் குற்ற்வாளி சார்பில் ஆஜரான வக்கீல் எவ்வளவோ திறமையுடன் வாதாடியும், சந்தர்ப்ப சாட்சியங்களைக் கொண்டு தண்டனை
வழ்ங்கப்படும் சூழ்நிலை. அவருக்கு ஆதரவாக இருந்தது ஒரே ஒரு விடயம் தான். கொல்லப்பட்டவர் பிணம் கிடைக்கவில்லை என்பதே அது.
இதை சாதகமாகக் கொண்டு குற்றவாளியைத் தப்புவிக்க ஒரு தந்திரம் செய்த வக்கீல். " யுவர் ஆனர், உங்களுக்கு ஒரு அச்சர்யமான செய்தி. கொல்லப்பட்டதாக சொல்லப்படும் நபர் இன்னும் 5 நிமிடங்களில் இங்கே வரப்போகிறார்." என்று அறிவித்தார்.

ஒரே பரபரப்பு..எல்லோரும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
5 நிமிடங்கள் கழிந்தன. ஒருவரும் வரவில்லை.

குற்றவாளி வக்கீல் தொண்டையை செருமிக்கொண்டு, "யுவர் ஆனர்..என்னதான் போலீசார் ஆதாரங்களை அள்ளி வீசினாலும், எல்லோருக்கும் ஒருவித சந்தேகம் இருந்ததால் தான் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தோம்.அந்த சந்தேகத்தின் பலன் குற்றம் சாட்டப்பட்டவருக்குப் போகவேண்டும்..அதனால்தான் இவ்வாறு பொய் சொல்ல நேர்ந்தது. தயவு செய்து அவரை விடுதலை செய்யுங்கள்" என்று முழங்கிவிட்டு அமர்ந்தார். அரசு வக்கீல் ஆடிப் போய்விட்டார்.

நீதிபதி தீர்ப்பு வாசித்தார். குற்றவாளிக்கு 7 வருடம் சிறை.
இப்போது குற்றவாளியின் வக்கீல் ஆடிப்போய்க் கேட்டார்.."யுவர் ஆனர், நீங்களும் வாசலைப் பார்த்துக்கொண்டிருந்த்ததை நான் பார்த்தேன். ஆனால் எப்படி ..." என்று இழுத்தார்.

அதற்கு நீதியரசர், " உண்மைதான்..எல்லோரும் வாசலைப் பார்த்துக் கொண்டிருந்த போது குற்றவாளி மட்டும் உம் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போ தான் அவன் குற்றவாளின்னு முடிவு பண்ணினேன். அதுக்கு முந்தி வரைக்கும் அவனை விடுதலை பண்ணிடலாம்ன்னு நெனச்சிருந்தேன்.உங்களுக்கு நன்றி" ன்னு ஒரு அணுகுண்டை போட்டுவிட்டு சேம்பருக்குப் போய்விட்டார்..!!!!!!!

................................

சர்தார் அமெரிக்காவில் உள்ள "நாசா" வில் வேலைக்கு சேர்ந்தார்..

ஒரு மாதம் கழித்து நாசா வின் பெயர் மாற்றப்பட்டு விட்டது..

"சர்வ நாசா"..!!!

.................................
அண்ணா சாலையில் சர்தார் குதிரையில் வந்தார்..
ட்ராபிக் எச்சரிக்கை விளக்கை மதிக்காமல் மேற்கொண்டு செல்லவே காவலர் விசில் ஊதினார்..

சர்தார் குதிரையின் வாலை கையால் தூக்கி, " நம்பர் ப்ளேட் பாத்துக்கோ" என்றார்..!!
......................................

2 comments:

said...

ஐ.... நான் தன் பர்ஸ்டு..... முதல் போனிய நான் தொடங்கி வைக்கிறேன்...

உனக்கு இந்த பதிவாச்சும் வியாபாரம் ஆகுதான்னு பார்ப்போம்...

said...

/
"சர்வ நாசா"..!!!
/

செம கலக்கல்
:)))))

Post a Comment