Sunday, August 17, 2008

சிரி..சிரி..சிரி..பாகம் - 7

வேலைக்கான நேர்முகம்.. சர்தார் அந்த வேலையை பெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தார். ..

"ஒரு சிங்கத்தை கொன்றால்தான் உனக்கு வேலை கிடைக்கும் என்றால் நீ என்ன செய்வாய்..?"

எவ்வளவோ யோசித்தும் வழியொன்றும் புலப்படவில்லை..
கடைசியில் ஒரு தீர்மானத்துடன் இவ்வாறு பதில் சொன்னார்..

"அரை லிட்டர் டெமக்ரான் ( பூச்சி கொல்லி) குடித்து விட்டு சிங்கத்தை சண்டைக்கு கூப்பிடுவேன்..!!!"
...........................
சின்னா ஆசிரியர்கள் ஓய்வறை வழியாகப் போனபோது ஒரு ஆசிரியர் கூப்பிட்டார்..

சின்னா, எனக்கொரு டீ வாங்கி வா..

மற்றொருவர் " எனக்கும்.. க்ளாஸை நல்லா கழுவிட்டு டீ போட்டு வாங்கிட்டு வா.."

சின்னா 2 தேனீர் குவளைகளுடன் திரும்பினான்..

" யார் சார் கழுவின க்ளாஸ்லே டீ கேட்டது.. இந்தாங்க...!"
..............
சின்னா ஒருநாள் அழுதுகொண்டே பள்ளிக்கு வந்தான்.. தலைமை ஆசிரியர் ஏனென்று கேட்டார். சின்னா சொன்னான்..

" நம்ம பள்ளிக்கு வர்ற மேட்டு ரோட்டுலே டேனியல் சார் சைக்கிளை ஏறி மிதிச்சுட்டு வந்தார்.. திடீர்ன்னு பெடல் வழுக்கி...." என்று சொல்லிவிட்டு மேலும் அழ ஆரம்பித்தான்,,

தலைமை ஆசிரியர்," அடடா.. சரி.. சரி.. இதுக்கெல்லாம் ஆம்பளைப் பையன் அழலாமா.? எங்கே.. சிரி.. பார்க்கலாம்." என்றார்.

"போங்க சார்.. அங்க சிரிச்சதுக்கு அவர் அடிச்சதினாலே தான் அழறேன்..! இங்கே வேறே சிரிக்க சொல்றீங்களே...!!!"
..............................
ஏண்டா சின்னா நம்ம வாத்தியாரை டீ கடையிலே ரவுண்டு கட்டி அடிச்சாங்க..?

பஜ்ஜி சாப்பிட்டு சும்மா வரவேண்டியதுதானே..? பழக்க தோஷத்திலே உங்க பொண்ண பாட சொல்லுங்க ன்னுருக்கார்..!!
__________________
good kid story
ஒரு காட்டுக்கு புதுசா ஒரு குதிரை வந்தது.. தான் உண்டு..தன் வேலை உண்டுன்னு இருந்தது. அது ஒடறதும் ஆடறதும் எல்லாருக்கும் பிடிச்சாலும் ஒரு நரிக்கு மட்டும் பிடிக்கவேயில்லே..
ஏன்னா அதுதான் அதுக்கு முன்னாடி சூப்பர் ஸ்டாரா இருந்துச்சு.

என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சு ஒருநாள் தன்னோட எடுபிடிய புலிக்கிட்ட அனுப்பி இந்த மாதிரி இந்த இடத்திலே ஒரு குதிரை மேய்ஞ்சுக்கிட்டு இருக்கு.. இப்போ வந்தா தின்னலாம்ன்னு சொல்ல சொன்னுச்சு.. புலியும் ஒருநாள் வந்துது..

புலி வர்றதப் பார்த்த குதிரை சட்டுன்னு ஒரு எலும்பை வாயிலே கவ்விக்கிட்டு, சத்தமா சொல்லுச்சாம்.." என்னதான் இருந்தாலும் புலிக்கறி ருசியே தனி.. இப்ப இருக்கற பசிக்கு இன்னொரு புலி கிடைச்சால்கூட திம்பேன்"!!!

இதைக்கேட்ட புலி எடுத்துச்சாம் ஓட்டம்..

இருந்தாலும் நரிக்கு தோல்விய ஒத்துக்க முடியல.. மறுபடியும் குறுக்கு புத்திய உபயோகிச்சு என்ன பண்ணலாம்ன்னு பார்த்துச்சு.
ஒருநாள் மறுபடியும் புலிக்கிட்ட போய் நடந்ததையெல்லாம் சொல்லி, இப்படித்தான் உன்னை முட்டாளாக்கிடுச்சு குதிரைன்னுச்சாம்.

புலி இருந்தாலும் எதுக்கு ரிஸ்க் எடுக்கணும்ன்னு யோசிச்சுது.

நரி நானே உன்னை அழைச்சுட்டு போறேன் வா.. அதுவும் இன்னைக்கு பின் பக்கமா தாக்குவோம்.. அப்படின்னு சொல்லி புலியை கையோட அழைச்சுட்டு வந்துச்சாம்..

தெய்வாதீனமா இந்த தடவையும் குதிரை இதை பாத்துடிச்சாம்..
சட்டுன்னு அவங்க வர்ற திசைக்கு எதிர் திசையிலே திரும்பி நின்னுக்கிட்டு, ரொம்ப சத்தமா.."இன்னைக்கு எப்படியும் ஒரு புலியை அழைச்சுட்டு வர்றேன்னு சொல்லிட்டு போச்சுது அந்த சனியன் புடிச்ச நரி.. 1 மணி நேரம் ஆகுது.. இன்னும் கானோமே" ன்னு தனக்குள்ளேயே பேசிக்கறமாதிரி சொல்லுச்சாம்..

அப்புறம் என்ன.. நரியின் கதி என்னாச்சு..அப்படிங்கறதெல்லாம் நான் சொல்லியா தெரியணும்..?
.........................
ஒருவன் பழைய கட்டிடத்தினூடே சென்று கொண்டிருந்தான்..
அப்போது " அப்படியே நில்.. அசையாதே.." என்று ஒரு சத்தம். ஆனால் எங்கிருந்து வந்தது எனத் தெரியவில்லை.. என்றாலும் அசையாமல் நிற்க, அவன் போகவிருந்த வழியில் ஒரு சுவர் இடிந்து விழுந்தது. இவன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்..

மற்றொரு நாள்.. பேர்ந்தில் ஏறப் போனபோது மீண்டும் அதே குரல்.. " இந்த பேருந்து வேண்டாம்..". அவனும் அதைத் தவிர்த்து அடுத்த பேருந்தில் செல்லும்போது இவன் சென்றிருக்கவேண்டிய பேருந்து கவிழ்ந்திருப்பதைப் பார்த்தான்..

மிகவும் ஆச்சரியத்துக்குள்ளானவனாய், யார் என்னை ஒவ்வொருமுறையும் காப்பாற்றுவது..?" என நினைத்தான்.. அதற்கும் உடனடியாக பதில் வந்தது.." நான் உன் காவல் தெய்வம்".

இவன் அடுத்தபடியாக கேட்டான்,,

"ஓ காவல் தெய்வமே... என் கல்யாணத்தப்ப எங்கே போய்த் தொலைஞ்சே..?"
...................

11 comments:

said...

சிரிக்க முடிந்தது!

said...

//"ஓ காவல் தெய்வமே... என் கல்யாணத்தப்ப எங்கே போய்த் தொலைஞ்சே..?"//

இப்டி சின்ன விஷயத்துல எல்லாம் காப்பாத்திவிட்டுட்டு கல்யாணத்தப்ப நல்லா வசமா மாட்டிவிடுறதுதான் காவல் தெய்வத்தோட வேலை.

said...

மிக்க நன்றி தங்களது மேன்மையான கருத்துக்கு, தங்களது கருத்துக்கள்தான் எனக்கு பூஸ்ட்,

said...

:-))))))))))))))

said...

அந்தக்கடைசி உண்மையிலயே யோக் தான்..

said...

யோவ், ஏனையா எல்லாருமா கலியாணத்தை இப்படி கேவலப் படுத்திறீங்க?

said...

நல்லா இருக்கு...... வாழ்த்துக்கள்!

said...

இதுக்குன்னே உக்காந்து யோசிப்பாய்ங்களோ...:)
நல்லாவே இருக்கு

said...

நரி கதை சூப்பர்

said...

//"ஓ காவல் தெய்வமே... என் கல்யாணத்தப்ப எங்கே போய்த் தொலைஞ்சே..?"
//

:)) சூப்பரப்பு!

said...

பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்

Post a Comment