Saturday, August 16, 2008

சிரி..சிரி..சிரி..பாகம் - 6

ஒரு ஆரம்பப் பள்ளிக்கு அதிபர் புஷ் வருகை புரிந்தார்.. சிறு உரைக்குப் பின் மாணவர்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்க தயாரானார்..
ஒரு மாணவன் கை உயர்த்தினான்..

புஷ் ; நல்லது.. உன் பெயர் என்ன்..?

மா ; பாப்..

புஷ் ; எது வேண்டுமானாலும் கேள் பாப்..

பாப் ; நன்றி அதிபரே..! என்னிடம் மூன்று கேள்விகள் உள்ளன..
1 ..ஐ.நா.சபை தடுத்தும் கேட்காமல் ஈராக் மீது போர் தொடுத்தது ஏன்..?
2.. திரு. கெர்ரி உங்களைவிட அதிக வாக்குகள் பெற்றிருந்தும் நீங்கள் அதிபர் ஆனது எப்படி..?
3.. ஒசாமா பின் லேடனை பிடிப்பது எப்போது..?

புஷ் பதிலளிக்கத் திணறிக்கொண்டிருக்கும் போது இடைவேளைக்கான மணி அடிக்கவே கேள்வி நேரம் நிறுத்தப்பட்டது.

இடைவேளைக்குப் பின்.. உற்சாகமாக வந்த புஷ். கேள்விகளைத் தொடரச் சொன்னார்.. மிகுந்த தன்னம்பிக்கையுடன்..

ஒரு மாணவன் கை உயர்த்தினான்..

புஷ் ; நல்லது.. உன் பெயர் என்ன்..?

மா ; ஆல்ன்..

புஷ் ; எது வேண்டுமானாலும் கேள் ஆலன்..

ஆலன் ; நன்றி அதிபரே..! என்னிடம் ஐந்து கேள்விகள் உள்ளன..
1 ..ஐ.நா.சபை தடுத்தும் கேட்காமல் ஈராக் மீது போர் தொடுத்தது ஏன்..?
2.. திரு. கெர்ரி உங்களைவிட அதிக வாக்குகள் பெற்றிருந்தும் நீங்கள் அதிபர் ஆனது எப்படி..?
3.. ஒசாமா பின் லேடனை பிடிப்பது எப்போது..?
4.. 20 நிமிடங்கள் முன்னதாகவே இடைவேளைக்கான மணி அடிக்கப் பட்டது ஏன்..?

5.. மாணவன் பாப் எங்கே..? அவனை என்ன செய்தீர்கள்..?
...................
ஜார்ஜ் புஷ்ஷின் கார் டிரைவர் ஒரு பன்றியை இடித்து கொன்றுவிட்டார். ஜார்ஜ் புஷ் பன்றியின் உரிமையாளரை பர்ர்த்து மன்னிப்பு கடக்குமாறு கூறினார். டிரைவர் உள்ளே சென்ரார்.

அவ்வாறே உள்ளே சென்ற டிரைவர் திரும்பி வரும்போது, கை நிறைய பணமும், நிறைய பரிசுப் பொருட்களும் கொண்டுவந்தார். அவரது பன்றியைக் கொன்றதற்காக அவர் கோபிக்கவில்லையா? அவர் பரிசு தருமளவிற்கு என்ன சமாதானம் கூறினாய்? என்று கேட்டார். அதற்கு டிரைவர் சொன்ன பதில்: நான் ஜார்ஜ் புஷ்ஷின் கார் டிரைவர். அந்தப் பன்றியை இப்போதுதான் கார் ஓட்டி கொன்றேன் எனக் கூறினேன்.
...................
வயது முதிர்ந்த பெண்மணி ஒருவர் மாடிப் படியில் இறங்கும்போது கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டது.
மருத்துவர் மாவுக்கட்டு போட்டுவிட்டு " பாட்டி, இன்னும் 1 மாசத்துக்கு மாடிப் படி ஏறக்கூடாது.." என்று சொல்லிப் போனார்.

ஒரு மாதத்துக்குப் பின், மாவுக்கட்டை மருத்துவர் அகற்றும் போது பாட்டி கேட்டாள்..

டாக்டர்.. இனி படியில் ஏறலாமில்லையா..?

ஓ.எஸ்.. தாராளமா..

நன்றி டாக்டர்.. தண்ணி பைப்பை புடிச்சி மாடி ஏறுவது ரொம்பக் கஷ்டமா இருந்திச்சு..!!!
...........................
ஆண் யானையும் பெண் எறும்பும் காதலித்தன.. எறும்பு பெற்றோர் சம்மத்ம் வேண்டி நின்றது. அவர்களும் 2 நாளில் யோசித்து சொல்வதாக கூறினர்..

படபடப்பான 48 மணி நேரத்துக்குப் பிறகு முடிவு அறிவிக்கப்பட்டது.

எங்களுக்கு சம்மதம் இல்லை.. பையனுக்கு பல்லு பெருசா இருக்கு..!!!
...........................
எதுக்குப்பா கல்யாண மாப்பிள்ளையை குதிரையிலே ஏத்திவிடறாங்க..?

தப்பிச்சு போக கடைசியா ஒரு வாய்ப்பு கொடுக்கறாங்க
.........................
ஏதாவது கல்யாணத்துக்கு போனாப் போதும்.. இந்த பாட்டிகள் எல்லாம் வந்து கன்னத்தை கிள்ளி " அடுத்தது உனக்குதான்" ன்னு ரவுசு பண்ணுவாங்க.

இதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டினேன்.. எப்படி தெரியுமா..?

நானும் அவங்களை கிண்டல் பண்ண ஆரம்பிச்சேன்.." அடுத்தது நீதான்" அப்படின்னு... துக்கம் கேட்க போற வீடுகள்லே...!!
.......................
இன்ஸ்பெக்டர்.. என்னை உடனே லாக்-அப் -ல் வையுங்க..

ஏன்.. என்ன ஆச்சு..?

என் மனைவியை கட்டையால் தலையில் அடித்துவிட்டேன்..

செத்துட்டாங்களா..?

இல்லே.. கோபமா வந்துட்டு இருக்கா.. அதனாலதான் சொல்றேன்.. ப்ளீஸ்.. உடனே உள்ள வச்சு பூட்டுங்க..!!
...................

2 comments:

said...

:))

Anonymous said...

:))))))))))

Post a Comment