Tuesday, August 19, 2008

சிரி..சிரி..சிரி..பாகம் - 9

ஒரு நாட்டில் போர் நடந்து கொண்டிருந்தது. அரசாங்கம் "குடிமக்கள் அனைவரும் தம் சக்திக்கு ஏற்ப யுத்த நிதி வழங்க வேண்டும்" என்று ஒரு உத்தரவு போட்டது. ஒரு பெரும் பணக்காரர் மட்டும் ஒரு பைசா கூட தராதது ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டது. உடன் ஒரு அதிகாரி அந்தப் பணக்காரரிடம் பேசி நிதி வாங்கி வர அனுப்பப் பட்டார்..

"அய்யா.. தாங்கள் இதுவரை நிதி தரவில்லை என்பது அரசு ஆய்வில் தெரிய வந்துள்ளது.. எனவே..."

"நிறுத்துங்கள்.. என்னய்யா பெரிய ஆய்வு..? என்னுடைய தாய் அடுத்த வேளை சோற்றுக்கில்லாமல் பட்டினி கிடந்து செத்தாளே.. அதை ஆய்வு செய்தீர்களா..??"

" வருந்துகிறேன் அய்யா.. ஆனால்..."

" என் தந்தை புற்றுநோயால் அவதிப்பட்டு தர்ம ஆஸ்பத்திரியில் தரையில் கிடந்து செத்தாரே.. அதைக் கண்டுபிடித்தீர்களா உங்கள் ஆய்வில்..?"

" மன்னிக்கவும் அய்யா.. இது...."

"நான் இன்னும் முடிக்கவில்லை..என்னுடைய தம்பி கடனாளி ஆகி குடும்பத்துடன் விஷம் குடித்தானே.. அது தெரியுமா உங்களுக்கு..?"

" தெரியாது அய்யா.."

" அவ்வளவு அவஸ்தைப் பட்ட அவர்களுக்கே நான் ஒரு பைசா கொடுக்கவில்லை.. உங்களுக்கு தருவேனா..? போய் வாருங்கள்..!"
"......???....."
....................
அதிபர் புஷ் வானுலகம் சென்றார்.. எமன் அவருக்கு தண்டனை விதித்து அதற்கான மூன்று தேர்வுகள் கொடுத்து எதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்க சொன்னான்..

முதல் அறையைத் திறந்து காட்ட, ஹிட்லரை சவுக்கால் அடித்துக் கொண்டிருந்தார்கள்.. புஷ் தன்னால் அடி தாங்க முடியாது என்று சொல்ல அடுத்த கதவு திறக்கப் பட்டது.
அங்கு இடி-அமீனை உரலில் போட்டு இடித்துக் கொண்டிருந்தார்கள்.. புஷ் அதுவும் முடியாதென்று மறுக்க.. அடுத்த கதவு திறந்துகாட்டும் போது எமன் சொன்னான்..

இதற்கு உமக்கு அருகதையே இல்லை.. இருந்தாலும் மூன்றாவது சாய்ஸ் இதுதான்..

அங்கு காந்தி அவர்களுக்கு எலிசபெத் டெய்லர் கால் அமுக்கி விட்டுக் கொண்டிருந்தார்.. புஷ் மிகுந்த சந்தோஷத்துடன் இதை ஏற்றுக்கொள்கிறேன் என்று கூற.. எமன் எலிசபெத் டைலரிடம் சொன்னான்..

" அம்மையாரே.. நீங்கள் கிளம்புங்கள்.. உங்கள் தண்டனைக் காலம் முடிந்து விட்டது.. இனி புஷ் பார்த்துக் கொள்வார்..!"
.......................
Bஒரு வேலைக்கான நேர்காணல்..

அதிகாரி ; இதுவரைக்கும் சிறப்பா செஞ்சுருக்கீங்க. இந்த மொழியறிவுச் சுற்றுலயும் தேர்வடைஞ்சுட்டீங்கன்னா வேலை கிடைச்சுடும்.. ஓ.கே. வா. சரி சொல்லுங்க..கூட்டுக்குறைபாட்டு குழுப்பதிவு சித்தாந்தம். இது பற்றி விளக்க முடியுமா..?

ம்ம். முடியுமே.. என் சித்தப்பா மகனுக்கு இந்த வேலையைக் கொடுத்தாச்சு. நீ போகலாம் அப்படின்னு அர்த்தம்.

..................................
தகப்பனார் சட்டையை எடுத்து மாட்டும் போது பையை கவனித்தார்.. காசு குறைந்தது.. பையனைத் திட்டினார்.. பையன் இல்லையென்று மறுத்தான்..தகப்பனார் நம்பவேயில்லை.. அம்மாக்காரி மகனுக்கு பரிந்து பேசினாள்..

ஏங்க பிள்ளையை கரிச்சு கொட்டறீங்க..? நான் எடுத்திருக்கக் கூடாதா..?

சான்ஸே இல்லே கமலா.. இன்னும் பணம் மிச்சம் பையில இருக்கே..!
.................
கணவன் ஒருநாள் அலுவலகத்திலிருந்து தாமதமாக வந்தான்.. மனைவி அவன் சட்டையை சோதனை இட்டாள்.. ஒரு பெண்ணின் தலை முடி இருந்தது..பிலாக்கணம் பாடினாள்..

ஓஹோ.. உங்க வயசுக்கு சின்னப் பொண்ணா கேக்குதோ..?

இன்னொரு நாள் நரை முடி இருக்க.. கத்தினாள்..

கிழட்டு மாடுகளுடன் சகவாசமா..?வெட்கமா இல்லே..?

மறுநாள் சட்டையை நன்கு உதறிப் போட்டுக் கொண்டு வந்தான்.. மனைவிக்கு முடி எதுவும் தென்படவில்லை.. இருந்தாலும் விடவில்லை..

அடப்பாவி மனுஷா.. மொட்டை அடிச்சவளைக்கூட விடுறது இல்லியா..?

....................
என்னங்க ஆபரேஷன் பண்றதுக்குள்ளேயே தியேட்டர்லேருந்து பச்சை ட்ரெஸ்ஸோட ஓடியாந்துட்டீங்க..?

இல்லே.. நர்ஸ் சொன்னாங்க.. இது சின்ன ஆபரேஷந்தான்.. டென்ஷன் ஆகாதீங்க..கடவுள் இருக்கார்.. அப்படின்னு..

சரி.. அதுக்கு எதுக்கு ஓடி வந்தீங்க..? தைரியம் தானே சொல்லியிருக்காங்க..

தைரியம் சொன்னது எனக்கு இல்லே.. டாக்டருக்கு..!
...................
ஒரு முறை ஒரு மருத்துவமனைக்கு நண்பர் ஒருவரைப் பார்க்க சென்றிருந்தேன்.. செவிலியர் (நர்ஸ்) அனைவரும் ஆப்பிள் டிசைன் போட்ட புடவை கட்டியிருந்தார்கள்.. எனக்கு தெரிந்த செவிலியர் ஒருவரைக் கேட்டேன்..

" என்னப்பா.. எல்லாம் ஆப்பிள் டிசைன் புடவை கட்டியிருக்கீங்க..?

"அதுவா ராஜா..? டாக்டரை தூரமா வைக்கதான்..?"
____________________________________________
an Apple A Day Keeps Doctor Away...!
...........................
கேடி கபாலியோட மகளை, நம்ம இன்ஸ்பெக்டர் மகனுக்குக் கேட்டாங்களே என்னாச்சி?"

" பழக்க வழக்கம் சரியிருக்காதுன்னு கபாலி வேண்டாமுன்னு
சொல்லிட்டான்..!
__________________

ஆசிரியர்:எந்த ஒருவனுக்கு மத்தவங்களுக்கு ஒருவிஷயத்த புரியவைக்க முடியலயோ அவன் ஒரு முட்டாள். புரியுதா?

மாணவர்கள்(ஒரே குரலில்)சுத்தமா புரியல சார் ...!
.........................
ஆசிரியர் : ஏண்டா எவ்வளவு சொன்னாலும் அதிகப்பிரசங்கித்தனமா பேசுற? நல்ல மாட்டுக்கு ஒரு சூடு..

சின்னா : நல்ல மாட்டுக்கு ஏன் சார் சூடு போடணும்? அது தான் நல்ல மாடு ஆச்சே?
....................
ஆசிரியர் : மாணவர்களே, நீங்க எல்லாரும் வைரம் மாதிரி....

சின்னா : நீங்க கூட வைரம் தான் ஸார்..

ஆசிரியர் : எப்படி சொல்றே ?

சின்னா : ஒரு வைரத்தால தானே இன்னொரு வைரத்தை அறுக்க முடியும்..?!!!!!!!
..................
சோதனை அதிகாரி : உங்க பள்ளியில் சுமாரா எத்தனை மாணவிகள் இருப்பாங்க?

சின்னா: எங்க பள்ளியில எல்லா பொண்ணுங்களுமே சுமார் தான் சார்...!!!!
...............
ஆசிரியர் ; கடவுள் நம்ம பாவங்களை எல்லாம் மன்னிக்கனும்ன்னா நாம என்ன பண்ணனும்..?

சின்னா ; வேறென்ன.. பாவம்தான் பண்ணனும்..!
.....................
ஒரு நடிகை..
18 வயசுக்காரியா இருந்தா கால் பந்து மாதிரி.. 22 பய தொரத்திக்கிட்டு திரிவான்..
24 வயசாயிட்டா... கூடை பந்து மாதிரி... 10 பய இழுத்துக்கிட்டு திரிவான்..
30 வயசாயிட்டா.. கோல்ஃப் பந்து மாதிரி.. ஒரே ஒரு ஆள்தான் வச்சு விளையாடிட்டு இருப்பாரு..
35 வயசுக்கு மேலே ஆயிடுச்சுன்னு வச்சுக்கங்க... டென்னிஸ் பந்து மாதிரி.. இவன் அவன்கிட்டே தள்ளி விடுவான்.. அவன் இவன்கிட்டே அடிச்சு விரட்டுவான்..!!

.....

0 comments:

Post a Comment