Monday, August 18, 2008

சிரி..சிரி..சிரி..பாகம் - 8

புது காரை எடுத்துச்சென்ற மனைவி கணவனுக்கு தொலைபேசினாள்..

என்னங்க.. ஒரு கெட்ட செய்தி.. ஒரு நல்ல செய்தி..

கெட்ட செய்தி தானே எப்போதும் சொல்லுவே.. என்ன இன்னொரு நல்ல செய்தி.. ? அதை முதல்ல சொல்லு..

பின் பக்க கண்ணாடியை மட்டும் மாத்த வேண்டாம்.. அது நல்லா இருக்கு..!
.................
ஒரு செல்வந்தர் அபாயகரமான நோயிலிருந்து ஒரு மருத்துவரால் காப்பாற்றப்பட்டார். மருத்துவ மனையிலிருந்து புறப்படும்போது...

செல்வர் ; டாக்டர்.. நீங்கள் என் தெய்வம்.. எனக்கு உயிர் கொடுத்தவர்.. உங்களுக்கு மருத்துவக் கட்டணம் என்ற பெயரில் ஒரு சிறு தொகையைக் கொடுத்து உங்களை சிறுமைப் படுத்த விரும்பவில்லை.. நான் நேற்று எழுதிய உயிலில் உங்கள் பெயரைக் குறிப்பிட்டு ஒரு சொத்து எழுதியுள்ளேன்.. இது என் காணிக்கை.

மருத்துவர் ; இதை ஏன் பெரிதுபடுத்துகிறீர்கள்..? சரி.. இனி தாங்கள் சாப்பிடவேண்டிய மருந்துப் பட்டியல் ஒன்று தந்தேன் அல்லவா..? அதைக் கொஞ்சம் கொடுங்கள்..

செல்வர் ; ஏன் டாக்டர்..?

மருத்துவர் ; ஒரு சிறு மாறுதல் செய்யவேண்டும்..!!!
..............
நயாகரா நீர்வீழ்ச்சி அருகே சுற்றுலா பயணிகளிடம்..ஒரு வழிகாட்டி சொல்கிறார்...

"இதுவே உலகின் மிகப்பெரிய அருவி.. இதன் ஓசை அளவிட முடியாதது.. ஒரே நேரத்தில் 20 அதிவேக விமானங்கள் எழுப்பும் ஒலியைவிட அதிகமானது.. அம்மணிகளே.. சற்று அமைதியாக இருங்கள்.. அருவியின் ஓசையை நன்கு கேட்கலாம்...!!!"
......................
ஏங்க.. என்கிட்டே உங்களுக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் எது..? என்னோட அழகா..? என்னோட புத்திசாலித்தனமா..? இல்லே என்னோட குடும்பம் நடத்துற திறமையா..?

உன்னோட இந்த நகைச்சுவை உணர்ச்சிதான்.. கோகிலா..!!!
................
ஆதவன் ; என்னங்க ராஜா.. உங்க நகைச்சுவைய படிச்சு சிரிச்சு பாதி உயிர் போயிடுச்சு..

ராஜா ; இன்னொரு தடவை படியுங்க ஆதவன்..!
......................
தலைவருக்கு தேர்தல் பற்றிய அனுபவம் இல்லேன்னு நினைக்கிறேன்..

ஏன்..?

ஓட்டை பிரிச்சா வெற்றி நிச்சயம்ன்னு சொன்னதுக்கு, நான் ஒரு காலத்துல கொத்தனாரா இருந்தவன்தான்னு சொல்லிட்டு கூரை மேல ஏறிட்டாரு
....................
தலைவர் வீட்டு சோதனையிலே கிடைச்ச 2000 செருப்புகளுக்கு என்ன சமாதானம் சொல்லி சமாளிச்சாரு..?

காசு குடுத்து வாங்கியிருந்தா கணக்கு காட்டலாம்.. மேடையிலே வந்து விழுந்ததுக்கெல்லாம் எப்படி கணக்கு காட்டுறதுன்னு சொல்லிட்டாரு..
....................
தலைவர் தேர்தல்ல ஜெயிச்சதும் தலை கால் புரியலேன்னு நினைக்கிறேன்..

ஏன்..?

அங்க பாரு.. கழுத்துல விழுந்த மாலையை கழட்டி மக்களைப் பார்த்து வீசறதுக்கு பதிலா வேஷ்டிய அவுத்து வீசறதை..!!
....................
ஏன் சிங்கு நீ பார்த்துகிட்டு இருந்த வேலையை விட்டுட்டே..?

நான் எங்கே விட்டேன்.. அந்த ஆபீஸ் வேறே இடத்துக்கு மாத்திட்டாங்க.. இன்னி வரைக்கும் அது எங்கே இருக்குன்னு எங்கிட்டே சொல்லாம வச்சிருக்காங்க..!
...........................
நம்ம சர்தார் ரயில்ல போனாரு.. கூட இருந்த பயணிக்கிட்ட 50 ரூபாய் பணம் கொடுத்து அமிர்தசரஸ் ஸ்டேஷன்லே எழுப்பி விடச் சொன்னார்.. அந்த இன்னொரு பயணி நாவிதர்..அந்த 50 ரூபாய்க்கு இன்னும் எதாவது செய்யணும்ன்னு நெனைச்சு சர்தார் தூங்கும் போதே சவரம் வேறே பண்ணிவிட்டுட்டாரு..விடிகாலையிலே நிலையம் வந்தவுடன் எழுப்பியும் விட்டுட்டாரு..

அடிச்சு புடிச்சு எழுந்த சர்தார் எறங்கி வீட்டுக்கு ஓடினாரு.. முகம் கழுவும்போது தான் கவனிச்சாரு.. உடனே கத்தினார்..

அய்யய்ய்யோ... பணம் வாங்கிட்டு ஏமாத்திட்டான்..

சர்தாரிணி கேட்டுச்சு.. என்னங்க ஆச்சு..?

எனக்கு பதிலா வேறே ஆளை எழுப்பி நம்ம வீட்டுக்கு அனுப்பிட்டாண்டி அந்த எதிர் சீட்டு காரன்...!
...................
சர்தார் ஒருநாள் நண்பன்கிட்ட சொன்னாரு..

நான் இப்ப கொஞ்சம் கொஞ்சமா கடவுள் ஆகிக்கிட்டு வர்றேன்..

அப்படியா.. சொல்லவே இல்ல..

ஆமாம்..நான் எங்கே போனாலும் மக்கள் இப்போ " அடக் கடவுளே... நீ இங்கேயும் வந்துட்டியா..? " ன்னு கேட்கறாங்க..!
................
ஒரு காட்டுவாசிகளிடையே ஒரு மத போதகர் உரையாற்றிக் கொண்டிருந்தார்..

" அன்புக் குழந்தைகளே.. கடவுள் அன்பானவர்.."

"பவானா..!"

" அவர் வல்லமை மிக்கவர்.. எல்லாப் பக்கங்களிலிருந்தும் உங்களைப் பரிவுடன் பார்த்துக் கொள்வார்.."

"பவானா..!"

" நான் உறுதியாகச் சொல்லுவேன்.. நீங்கள் எது குறித்தும் அச்சப்படத் தேவையில்லை...!"

"பவானா...!"

" எந்த ஆபத்திலிருந்தும்.. அபாயத்திலிருந்தும்.. சாத்தானிடமிருந்தும் அவர் உங்களைக் காப்பார்..!"

"பவானா....!"

அதன்பின் "பவானா" என்றால் புலி வருகிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் முன்னரே அந்தப் பிரசங்கி மோட்சமடைந்து விட்டார்."

0 comments:

Post a Comment