எனக்குக் காற்றும் - காதலும்
ஓன்றுதான்!
மலரோடு பேசும் தென்றலாய்...
நேற்றுவரை நம் காதல்!
சுவாசிக்க முடிந்தது!
மழையோடு வீசும் புயலாய்...
நீ பேசிய வார்த்தைகள்!
சுவாசிக்க முடியுமா புயலை...!
மூச்சை நிறுத்திக் கொள்ளலாம்...
அதற்காகக் காற்று நிற்காது...
என் காதல் போல்!
முடிந்தால் வாழ்ந்து கொள்...
என் "ஞாபக நொடிகள்"
இல்லாத நிமிடங்களோடு!
காதலைச் சொல்லவும்
காதலைக் கொல்லவும்
போதும் மூன்று வார்த்தைகள்!
உன் வார்த்தைகளால்
வடுக்களைத்தான் தரமுடியும்...
என்னிடமிருந்து உன் காதலைத்
திரும்பப் பெறமுடியாது...!
ஆ.............. கவிதை தொகுப்பில் சுட்டது
Thursday, December 11, 2008
எனக்குக் காற்றும் - காதலும்
Labels:
kavithai,
கவிதை,
சுட்ட கவிதை
Monday, December 08, 2008
நட்பு
புரியாத நட்புக்கு
அருகில் இருந்தும்
பயனில்லை!
புரிந்து கொண்ட நட்புக்கு
பிரிவு ஓரு தூரமில்லை
Labels:
கவிதை,
சுட்ட கவிதை
Saturday, December 06, 2008
கண் தானம்
கண் தானத்தை பற்றி நான் படித்த ஒரு ஆட்டோ கவிதை இதோ உங்களுக்காக
மண்ணில்
புதைப்பதை விட
பிறர்
கண்ணில்
விதைப்போம்
நான் படித்ததை போல மேலும் பலரும் படித்து இருக்கலாம், இக்கவிதை என்னை கொஞ்சம் சிந்திக்க வைத்தது.
Friday, December 05, 2008
எதிர்காலம்
உன்
கைரேகையை பார்த்து
எதிர்காலத்தை
நம்பிவிடாதே
கை இல்லாதவனுக்கும்
எதிர்காலம் உண்டு
Labels:
கவிதை
Wednesday, December 03, 2008
Subscribe to:
Posts (Atom)