என்னை கவிஞனாக்கிய பெருமை
உனக்குரியது
எனக்கான கவிதை நீ!
என்பதின் பெருமை
எனக்குரியது!..
Friday, May 22, 2009
நீ...
Thursday, May 21, 2009
காதல்.com
என் இதயக்காதல்
SERVER _ ஏ
உன் இனிய
CLIENT _ எழுதுவது
என் இனிய
OPERATING SYSTEM _மே
உன்னால் இயங்கும்
SYSTEM _எந்தன்
காதல் கஷ்டங்களை விளக்கும்
NOTEPAD... இது!
உன் முதற்பார்வையிலேயே என்னை
SCAN செய்தாய்...
ஆனால்
காதல் VIRUS
என்னைத்தாக்கிவிட்டது,,!
நொடிகளில் கண்களால்
COPY செய்தேன்
உன்னுருவத்தை..!
PASTE செய்தேன்
என் உள்ளத்தில்..!
என் இதய DESKTOP_ல்
உன் முகம்தான்
இப்போது WALLPAPER..!
என் நினைவு
SCREEN SAVER_ல்
உன் பெயர் மட்டுமே
MARQUEE DISPLAY ஆகிறது...
என் ஞாபக FOLDER _ களில்
உன் நினைவு FILE _ கள்
மட்டுமே SAVE ஆகிறது
உன் ஒவ்வொரு
பார்வையிலும்
REFRESH ஆகும்
என் மனம் _ நீ
பார்க்காத நேரங்களில்
ALT+CTRL+DEL _ ஐ
நாடுகிறதே?!
உன் ஒவ்வொரு
அசைவும் GIF!
உன் ஒவ்வொரு
சொல்லும் MP3!
உன் ஒவ்வொரு
தோற்றமும் JPEG!
மொத்தத்தில் நீ
என் காதலின்
IP_ADDRESS..!
நம் இதய
NETWORK-ல்
LOGIN மட்டுமே உண்டு
நம் காதலுக்கு
என்றும் கிடையாது
SHUTDOWN...
Monday, May 11, 2009
மருதாணி
நேற்று நீ உறங்குகையில்
உன் கையில் மருதாணி
வைத்து விட்டேன் - உன்
நிறத்திற்கு மருதாணி சிவக்க வில்லைதான் - ஆனால்
அதை நீ அழிக்காமால் பாதுகாக்க
அரை நொடிகூட
தூங்காமல் இருந்தேன்
" அட என் கண்ணு -
நல்ல சிவந்து இருக்கே! "
Wednesday, May 06, 2009
என் காதல்
உயிரை உருக்கி
உணர்ச்சிகளை செதுக்கி
பத்திரமாக உனக்கென்ன
உள்ளுக்குள் பூட்டி வைத்து இருக்கிறேன்
என் காதல்
Thursday, December 11, 2008
எனக்குக் காற்றும் - காதலும்
எனக்குக் காற்றும் - காதலும்
ஓன்றுதான்!
மலரோடு பேசும் தென்றலாய்...
நேற்றுவரை நம் காதல்!
சுவாசிக்க முடிந்தது!
மழையோடு வீசும் புயலாய்...
நீ பேசிய வார்த்தைகள்!
சுவாசிக்க முடியுமா புயலை...!
மூச்சை நிறுத்திக் கொள்ளலாம்...
அதற்காகக் காற்று நிற்காது...
என் காதல் போல்!
முடிந்தால் வாழ்ந்து கொள்...
என் "ஞாபக நொடிகள்"
இல்லாத நிமிடங்களோடு!
காதலைச் சொல்லவும்
காதலைக் கொல்லவும்
போதும் மூன்று வார்த்தைகள்!
உன் வார்த்தைகளால்
வடுக்களைத்தான் தரமுடியும்...
என்னிடமிருந்து உன் காதலைத்
திரும்பப் பெறமுடியாது...!
ஆ.............. கவிதை தொகுப்பில் சுட்டது
Monday, December 08, 2008
நட்பு
புரியாத நட்புக்கு
அருகில் இருந்தும்
பயனில்லை!
புரிந்து கொண்ட நட்புக்கு
பிரிவு ஓரு தூரமில்லை
Saturday, December 06, 2008
கண் தானம்
கண் தானத்தை பற்றி நான் படித்த ஒரு ஆட்டோ கவிதை இதோ உங்களுக்காக
மண்ணில்
புதைப்பதை விட
பிறர்
கண்ணில்
விதைப்போம்
நான் படித்ததை போல மேலும் பலரும் படித்து இருக்கலாம், இக்கவிதை என்னை கொஞ்சம் சிந்திக்க வைத்தது.
Friday, December 05, 2008
எதிர்காலம்
உன்
கைரேகையை பார்த்து
எதிர்காலத்தை
நம்பிவிடாதே
கை இல்லாதவனுக்கும்
எதிர்காலம் உண்டு
Wednesday, August 06, 2008
அழிச்சாட்டியம்
ஒரு வயதில் மிட்டாயிக்கு
இரு வயதில் பலுனுக்கு
நாலு வயதில் முனு சக்கர வண்டிக்கு
ஏழு வயதில் முழு கால் சட்டைக்கு
பத்து வயதில் கிரிக்கெட் மட்டைக்கு
பன்னிரண்டு வயதில் மிதிவண்டிக்கு
இருபது வயதில் காதலுக்கும்
அழிச்சாட்டியம் செய்கிறோம்
கண்ணீர்.........
உண்ண விரதம் ..
பேச விரதம் ........
துணையுடன்
எல்லாம் சரிதான்
அழிச்சாட்டியம் சாத்தியமாவது இல்லை
ஒரு சமயத்தில் .........
அப்புறம் வருகிறேன் போ,
அடுத்த வருஷம் வந்து கூபிட்டு போ,
வர பிடிக்கவில்லை, விட்டு விடு
இன்னும் கொஞ்சம் வாழ வேண்டும், ப்ளீஸ்
செல்லு படியாகாது சல் ஜப்பு
செய்தது செய்த படி
போட்டது போட்ட படி
விட்டது விட்ட படி
அவனோடு போய் விடுகிறோம்
அழிச்சாட்டியம் அதிகம்
நம்மை விடவும் எமனுக்கு
எங்கோ படித்தது


