ஒரு நாட்டில் போர் நடந்து கொண்டிருந்தது. அரசாங்கம் "குடிமக்கள் அனைவரும் தம் சக்திக்கு ஏற்ப யுத்த நிதி வழங்க வேண்டும்" என்று ஒரு உத்தரவு போட்டது. ஒரு பெரும் பணக்காரர் மட்டும் ஒரு பைசா கூட தராதது ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டது. உடன் ஒரு அதிகாரி அந்தப் பணக்காரரிடம் பேசி நிதி வாங்கி வர அனுப்பப் பட்டார்..
"அய்யா.. தாங்கள் இதுவரை நிதி தரவில்லை என்பது அரசு ஆய்வில் தெரிய வந்துள்ளது.. எனவே..."
"நிறுத்துங்கள்.. என்னய்யா பெரிய ஆய்வு..? என்னுடைய தாய் அடுத்த வேளை சோற்றுக்கில்லாமல் பட்டினி கிடந்து செத்தாளே.. அதை ஆய்வு செய்தீர்களா..??"
" வருந்துகிறேன் அய்யா.. ஆனால்..."
" என் தந்தை புற்றுநோயால் அவதிப்பட்டு தர்ம ஆஸ்பத்திரியில் தரையில் கிடந்து செத்தாரே.. அதைக் கண்டுபிடித்தீர்களா உங்கள் ஆய்வில்..?"
" மன்னிக்கவும் அய்யா.. இது...."
"நான் இன்னும் முடிக்கவில்லை..என்னுடைய தம்பி கடனாளி ஆகி குடும்பத்துடன் விஷம் குடித்தானே.. அது தெரியுமா உங்களுக்கு..?"
" தெரியாது அய்யா.."
" அவ்வளவு அவஸ்தைப் பட்ட அவர்களுக்கே நான் ஒரு பைசா கொடுக்கவில்லை.. உங்களுக்கு தருவேனா..? போய் வாருங்கள்..!"
"......???....."
....................
அதிபர் புஷ் வானுலகம் சென்றார்.. எமன் அவருக்கு தண்டனை விதித்து அதற்கான மூன்று தேர்வுகள் கொடுத்து எதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்க சொன்னான்..
முதல் அறையைத் திறந்து காட்ட, ஹிட்லரை சவுக்கால் அடித்துக் கொண்டிருந்தார்கள்.. புஷ் தன்னால் அடி தாங்க முடியாது என்று சொல்ல அடுத்த கதவு திறக்கப் பட்டது.
அங்கு இடி-அமீனை உரலில் போட்டு இடித்துக் கொண்டிருந்தார்கள்.. புஷ் அதுவும் முடியாதென்று மறுக்க.. அடுத்த கதவு திறந்துகாட்டும் போது எமன் சொன்னான்..
இதற்கு உமக்கு அருகதையே இல்லை.. இருந்தாலும் மூன்றாவது சாய்ஸ் இதுதான்..
அங்கு காந்தி அவர்களுக்கு எலிசபெத் டெய்லர் கால் அமுக்கி விட்டுக் கொண்டிருந்தார்.. புஷ் மிகுந்த சந்தோஷத்துடன் இதை ஏற்றுக்கொள்கிறேன் என்று கூற.. எமன் எலிசபெத் டைலரிடம் சொன்னான்..
" அம்மையாரே.. நீங்கள் கிளம்புங்கள்.. உங்கள் தண்டனைக் காலம் முடிந்து விட்டது.. இனி புஷ் பார்த்துக் கொள்வார்..!"
.......................
Bஒரு வேலைக்கான நேர்காணல்..
அதிகாரி ; இதுவரைக்கும் சிறப்பா செஞ்சுருக்கீங்க. இந்த மொழியறிவுச் சுற்றுலயும் தேர்வடைஞ்சுட்டீங்கன்னா வேலை கிடைச்சுடும்.. ஓ.கே. வா. சரி சொல்லுங்க..கூட்டுக்குறைபாட்டு குழுப்பதிவு சித்தாந்தம். இது பற்றி விளக்க முடியுமா..?
ம்ம். முடியுமே.. என் சித்தப்பா மகனுக்கு இந்த வேலையைக் கொடுத்தாச்சு. நீ போகலாம் அப்படின்னு அர்த்தம்.
..................................
தகப்பனார் சட்டையை எடுத்து மாட்டும் போது பையை கவனித்தார்.. காசு குறைந்தது.. பையனைத் திட்டினார்.. பையன் இல்லையென்று மறுத்தான்..தகப்பனார் நம்பவேயில்லை.. அம்மாக்காரி மகனுக்கு பரிந்து பேசினாள்..
ஏங்க பிள்ளையை கரிச்சு கொட்டறீங்க..? நான் எடுத்திருக்கக் கூடாதா..?
சான்ஸே இல்லே கமலா.. இன்னும் பணம் மிச்சம் பையில இருக்கே..!
.................
கணவன் ஒருநாள் அலுவலகத்திலிருந்து தாமதமாக வந்தான்.. மனைவி அவன் சட்டையை சோதனை இட்டாள்.. ஒரு பெண்ணின் தலை முடி இருந்தது..பிலாக்கணம் பாடினாள்..
ஓஹோ.. உங்க வயசுக்கு சின்னப் பொண்ணா கேக்குதோ..?
இன்னொரு நாள் நரை முடி இருக்க.. கத்தினாள்..
கிழட்டு மாடுகளுடன் சகவாசமா..?வெட்கமா இல்லே..?
மறுநாள் சட்டையை நன்கு உதறிப் போட்டுக் கொண்டு வந்தான்.. மனைவிக்கு முடி எதுவும் தென்படவில்லை.. இருந்தாலும் விடவில்லை..
அடப்பாவி மனுஷா.. மொட்டை அடிச்சவளைக்கூட விடுறது இல்லியா..?
....................
என்னங்க ஆபரேஷன் பண்றதுக்குள்ளேயே தியேட்டர்லேருந்து பச்சை ட்ரெஸ்ஸோட ஓடியாந்துட்டீங்க..?
இல்லே.. நர்ஸ் சொன்னாங்க.. இது சின்ன ஆபரேஷந்தான்.. டென்ஷன் ஆகாதீங்க..கடவுள் இருக்கார்.. அப்படின்னு..
சரி.. அதுக்கு எதுக்கு ஓடி வந்தீங்க..? தைரியம் தானே சொல்லியிருக்காங்க..
தைரியம் சொன்னது எனக்கு இல்லே.. டாக்டருக்கு..!
...................
ஒரு முறை ஒரு மருத்துவமனைக்கு நண்பர் ஒருவரைப் பார்க்க சென்றிருந்தேன்.. செவிலியர் (நர்ஸ்) அனைவரும் ஆப்பிள் டிசைன் போட்ட புடவை கட்டியிருந்தார்கள்.. எனக்கு தெரிந்த செவிலியர் ஒருவரைக் கேட்டேன்..
" என்னப்பா.. எல்லாம் ஆப்பிள் டிசைன் புடவை கட்டியிருக்கீங்க..?
"அதுவா ராஜா..? டாக்டரை தூரமா வைக்கதான்..?"
____________________________________________
an Apple A Day Keeps Doctor Away...!
...........................
கேடி கபாலியோட மகளை, நம்ம இன்ஸ்பெக்டர் மகனுக்குக் கேட்டாங்களே என்னாச்சி?"
" பழக்க வழக்கம் சரியிருக்காதுன்னு கபாலி வேண்டாமுன்னு
சொல்லிட்டான்..!
__________________
ஆசிரியர்:எந்த ஒருவனுக்கு மத்தவங்களுக்கு ஒருவிஷயத்த புரியவைக்க முடியலயோ அவன் ஒரு முட்டாள். புரியுதா?
மாணவர்கள்(ஒரே குரலில்)சுத்தமா புரியல சார் ...!
.........................
ஆசிரியர் : ஏண்டா எவ்வளவு சொன்னாலும் அதிகப்பிரசங்கித்தனமா பேசுற? நல்ல மாட்டுக்கு ஒரு சூடு..
சின்னா : நல்ல மாட்டுக்கு ஏன் சார் சூடு போடணும்? அது தான் நல்ல மாடு ஆச்சே?
....................
ஆசிரியர் : மாணவர்களே, நீங்க எல்லாரும் வைரம் மாதிரி....
சின்னா : நீங்க கூட வைரம் தான் ஸார்..
ஆசிரியர் : எப்படி சொல்றே ?
சின்னா : ஒரு வைரத்தால தானே இன்னொரு வைரத்தை அறுக்க முடியும்..?!!!!!!!
..................
சோதனை அதிகாரி : உங்க பள்ளியில் சுமாரா எத்தனை மாணவிகள் இருப்பாங்க?
சின்னா: எங்க பள்ளியில எல்லா பொண்ணுங்களுமே சுமார் தான் சார்...!!!!
...............
ஆசிரியர் ; கடவுள் நம்ம பாவங்களை எல்லாம் மன்னிக்கனும்ன்னா நாம என்ன பண்ணனும்..?
சின்னா ; வேறென்ன.. பாவம்தான் பண்ணனும்..!
.....................
ஒரு நடிகை..
18 வயசுக்காரியா இருந்தா கால் பந்து மாதிரி.. 22 பய தொரத்திக்கிட்டு திரிவான்..
24 வயசாயிட்டா... கூடை பந்து மாதிரி... 10 பய இழுத்துக்கிட்டு திரிவான்..
30 வயசாயிட்டா.. கோல்ஃப் பந்து மாதிரி.. ஒரே ஒரு ஆள்தான் வச்சு விளையாடிட்டு இருப்பாரு..
35 வயசுக்கு மேலே ஆயிடுச்சுன்னு வச்சுக்கங்க... டென்னிஸ் பந்து மாதிரி.. இவன் அவன்கிட்டே தள்ளி விடுவான்.. அவன் இவன்கிட்டே அடிச்சு விரட்டுவான்..!!
.....
Tuesday, August 19, 2008
சிரி..சிரி..சிரி..பாகம் - 9
Monday, August 18, 2008
சிரி..சிரி..சிரி..பாகம் - 8
புது காரை எடுத்துச்சென்ற மனைவி கணவனுக்கு தொலைபேசினாள்..
என்னங்க.. ஒரு கெட்ட செய்தி.. ஒரு நல்ல செய்தி..
கெட்ட செய்தி தானே எப்போதும் சொல்லுவே.. என்ன இன்னொரு நல்ல செய்தி.. ? அதை முதல்ல சொல்லு..
பின் பக்க கண்ணாடியை மட்டும் மாத்த வேண்டாம்.. அது நல்லா இருக்கு..!
.................
ஒரு செல்வந்தர் அபாயகரமான நோயிலிருந்து ஒரு மருத்துவரால் காப்பாற்றப்பட்டார். மருத்துவ மனையிலிருந்து புறப்படும்போது...
செல்வர் ; டாக்டர்.. நீங்கள் என் தெய்வம்.. எனக்கு உயிர் கொடுத்தவர்.. உங்களுக்கு மருத்துவக் கட்டணம் என்ற பெயரில் ஒரு சிறு தொகையைக் கொடுத்து உங்களை சிறுமைப் படுத்த விரும்பவில்லை.. நான் நேற்று எழுதிய உயிலில் உங்கள் பெயரைக் குறிப்பிட்டு ஒரு சொத்து எழுதியுள்ளேன்.. இது என் காணிக்கை.
மருத்துவர் ; இதை ஏன் பெரிதுபடுத்துகிறீர்கள்..? சரி.. இனி தாங்கள் சாப்பிடவேண்டிய மருந்துப் பட்டியல் ஒன்று தந்தேன் அல்லவா..? அதைக் கொஞ்சம் கொடுங்கள்..
செல்வர் ; ஏன் டாக்டர்..?
மருத்துவர் ; ஒரு சிறு மாறுதல் செய்யவேண்டும்..!!!
..............
நயாகரா நீர்வீழ்ச்சி அருகே சுற்றுலா பயணிகளிடம்..ஒரு வழிகாட்டி சொல்கிறார்...
"இதுவே உலகின் மிகப்பெரிய அருவி.. இதன் ஓசை அளவிட முடியாதது.. ஒரே நேரத்தில் 20 அதிவேக விமானங்கள் எழுப்பும் ஒலியைவிட அதிகமானது.. அம்மணிகளே.. சற்று அமைதியாக இருங்கள்.. அருவியின் ஓசையை நன்கு கேட்கலாம்...!!!"
......................
ஏங்க.. என்கிட்டே உங்களுக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் எது..? என்னோட அழகா..? என்னோட புத்திசாலித்தனமா..? இல்லே என்னோட குடும்பம் நடத்துற திறமையா..?
உன்னோட இந்த நகைச்சுவை உணர்ச்சிதான்.. கோகிலா..!!!
................
ஆதவன் ; என்னங்க ராஜா.. உங்க நகைச்சுவைய படிச்சு சிரிச்சு பாதி உயிர் போயிடுச்சு..
ராஜா ; இன்னொரு தடவை படியுங்க ஆதவன்..!
......................
தலைவருக்கு தேர்தல் பற்றிய அனுபவம் இல்லேன்னு நினைக்கிறேன்..
ஏன்..?
ஓட்டை பிரிச்சா வெற்றி நிச்சயம்ன்னு சொன்னதுக்கு, நான் ஒரு காலத்துல கொத்தனாரா இருந்தவன்தான்னு சொல்லிட்டு கூரை மேல ஏறிட்டாரு
....................
தலைவர் வீட்டு சோதனையிலே கிடைச்ச 2000 செருப்புகளுக்கு என்ன சமாதானம் சொல்லி சமாளிச்சாரு..?
காசு குடுத்து வாங்கியிருந்தா கணக்கு காட்டலாம்.. மேடையிலே வந்து விழுந்ததுக்கெல்லாம் எப்படி கணக்கு காட்டுறதுன்னு சொல்லிட்டாரு..
....................
தலைவர் தேர்தல்ல ஜெயிச்சதும் தலை கால் புரியலேன்னு நினைக்கிறேன்..
ஏன்..?
அங்க பாரு.. கழுத்துல விழுந்த மாலையை கழட்டி மக்களைப் பார்த்து வீசறதுக்கு பதிலா வேஷ்டிய அவுத்து வீசறதை..!!
....................
ஏன் சிங்கு நீ பார்த்துகிட்டு இருந்த வேலையை விட்டுட்டே..?
நான் எங்கே விட்டேன்.. அந்த ஆபீஸ் வேறே இடத்துக்கு மாத்திட்டாங்க.. இன்னி வரைக்கும் அது எங்கே இருக்குன்னு எங்கிட்டே சொல்லாம வச்சிருக்காங்க..!
...........................
நம்ம சர்தார் ரயில்ல போனாரு.. கூட இருந்த பயணிக்கிட்ட 50 ரூபாய் பணம் கொடுத்து அமிர்தசரஸ் ஸ்டேஷன்லே எழுப்பி விடச் சொன்னார்.. அந்த இன்னொரு பயணி நாவிதர்..அந்த 50 ரூபாய்க்கு இன்னும் எதாவது செய்யணும்ன்னு நெனைச்சு சர்தார் தூங்கும் போதே சவரம் வேறே பண்ணிவிட்டுட்டாரு..விடிகாலையிலே நிலையம் வந்தவுடன் எழுப்பியும் விட்டுட்டாரு..
அடிச்சு புடிச்சு எழுந்த சர்தார் எறங்கி வீட்டுக்கு ஓடினாரு.. முகம் கழுவும்போது தான் கவனிச்சாரு.. உடனே கத்தினார்..
அய்யய்ய்யோ... பணம் வாங்கிட்டு ஏமாத்திட்டான்..
சர்தாரிணி கேட்டுச்சு.. என்னங்க ஆச்சு..?
எனக்கு பதிலா வேறே ஆளை எழுப்பி நம்ம வீட்டுக்கு அனுப்பிட்டாண்டி அந்த எதிர் சீட்டு காரன்...!
...................
சர்தார் ஒருநாள் நண்பன்கிட்ட சொன்னாரு..
நான் இப்ப கொஞ்சம் கொஞ்சமா கடவுள் ஆகிக்கிட்டு வர்றேன்..
அப்படியா.. சொல்லவே இல்ல..
ஆமாம்..நான் எங்கே போனாலும் மக்கள் இப்போ " அடக் கடவுளே... நீ இங்கேயும் வந்துட்டியா..? " ன்னு கேட்கறாங்க..!
................
ஒரு காட்டுவாசிகளிடையே ஒரு மத போதகர் உரையாற்றிக் கொண்டிருந்தார்..
" அன்புக் குழந்தைகளே.. கடவுள் அன்பானவர்.."
"பவானா..!"
" அவர் வல்லமை மிக்கவர்.. எல்லாப் பக்கங்களிலிருந்தும் உங்களைப் பரிவுடன் பார்த்துக் கொள்வார்.."
"பவானா..!"
" நான் உறுதியாகச் சொல்லுவேன்.. நீங்கள் எது குறித்தும் அச்சப்படத் தேவையில்லை...!"
"பவானா...!"
" எந்த ஆபத்திலிருந்தும்.. அபாயத்திலிருந்தும்.. சாத்தானிடமிருந்தும் அவர் உங்களைக் காப்பார்..!"
"பவானா....!"
அதன்பின் "பவானா" என்றால் புலி வருகிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் முன்னரே அந்தப் பிரசங்கி மோட்சமடைந்து விட்டார்."
Sunday, August 17, 2008
சிரி..சிரி..சிரி..பாகம் - 7
வேலைக்கான நேர்முகம்.. சர்தார் அந்த வேலையை பெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தார். ..
"ஒரு சிங்கத்தை கொன்றால்தான் உனக்கு வேலை கிடைக்கும் என்றால் நீ என்ன செய்வாய்..?"
எவ்வளவோ யோசித்தும் வழியொன்றும் புலப்படவில்லை..
கடைசியில் ஒரு தீர்மானத்துடன் இவ்வாறு பதில் சொன்னார்..
"அரை லிட்டர் டெமக்ரான் ( பூச்சி கொல்லி) குடித்து விட்டு சிங்கத்தை சண்டைக்கு கூப்பிடுவேன்..!!!"
...........................
சின்னா ஆசிரியர்கள் ஓய்வறை வழியாகப் போனபோது ஒரு ஆசிரியர் கூப்பிட்டார்..
சின்னா, எனக்கொரு டீ வாங்கி வா..
மற்றொருவர் " எனக்கும்.. க்ளாஸை நல்லா கழுவிட்டு டீ போட்டு வாங்கிட்டு வா.."
சின்னா 2 தேனீர் குவளைகளுடன் திரும்பினான்..
" யார் சார் கழுவின க்ளாஸ்லே டீ கேட்டது.. இந்தாங்க...!"
..............
சின்னா ஒருநாள் அழுதுகொண்டே பள்ளிக்கு வந்தான்.. தலைமை ஆசிரியர் ஏனென்று கேட்டார். சின்னா சொன்னான்..
" நம்ம பள்ளிக்கு வர்ற மேட்டு ரோட்டுலே டேனியல் சார் சைக்கிளை ஏறி மிதிச்சுட்டு வந்தார்.. திடீர்ன்னு பெடல் வழுக்கி...." என்று சொல்லிவிட்டு மேலும் அழ ஆரம்பித்தான்,,
தலைமை ஆசிரியர்," அடடா.. சரி.. சரி.. இதுக்கெல்லாம் ஆம்பளைப் பையன் அழலாமா.? எங்கே.. சிரி.. பார்க்கலாம்." என்றார்.
"போங்க சார்.. அங்க சிரிச்சதுக்கு அவர் அடிச்சதினாலே தான் அழறேன்..! இங்கே வேறே சிரிக்க சொல்றீங்களே...!!!"
..............................
ஏண்டா சின்னா நம்ம வாத்தியாரை டீ கடையிலே ரவுண்டு கட்டி அடிச்சாங்க..?
பஜ்ஜி சாப்பிட்டு சும்மா வரவேண்டியதுதானே..? பழக்க தோஷத்திலே உங்க பொண்ண பாட சொல்லுங்க ன்னுருக்கார்..!!
__________________
good kid story
ஒரு காட்டுக்கு புதுசா ஒரு குதிரை வந்தது.. தான் உண்டு..தன் வேலை உண்டுன்னு இருந்தது. அது ஒடறதும் ஆடறதும் எல்லாருக்கும் பிடிச்சாலும் ஒரு நரிக்கு மட்டும் பிடிக்கவேயில்லே..
ஏன்னா அதுதான் அதுக்கு முன்னாடி சூப்பர் ஸ்டாரா இருந்துச்சு.
என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சு ஒருநாள் தன்னோட எடுபிடிய புலிக்கிட்ட அனுப்பி இந்த மாதிரி இந்த இடத்திலே ஒரு குதிரை மேய்ஞ்சுக்கிட்டு இருக்கு.. இப்போ வந்தா தின்னலாம்ன்னு சொல்ல சொன்னுச்சு.. புலியும் ஒருநாள் வந்துது..
புலி வர்றதப் பார்த்த குதிரை சட்டுன்னு ஒரு எலும்பை வாயிலே கவ்விக்கிட்டு, சத்தமா சொல்லுச்சாம்.." என்னதான் இருந்தாலும் புலிக்கறி ருசியே தனி.. இப்ப இருக்கற பசிக்கு இன்னொரு புலி கிடைச்சால்கூட திம்பேன்"!!!
இதைக்கேட்ட புலி எடுத்துச்சாம் ஓட்டம்..
இருந்தாலும் நரிக்கு தோல்விய ஒத்துக்க முடியல.. மறுபடியும் குறுக்கு புத்திய உபயோகிச்சு என்ன பண்ணலாம்ன்னு பார்த்துச்சு.
ஒருநாள் மறுபடியும் புலிக்கிட்ட போய் நடந்ததையெல்லாம் சொல்லி, இப்படித்தான் உன்னை முட்டாளாக்கிடுச்சு குதிரைன்னுச்சாம்.
புலி இருந்தாலும் எதுக்கு ரிஸ்க் எடுக்கணும்ன்னு யோசிச்சுது.
நரி நானே உன்னை அழைச்சுட்டு போறேன் வா.. அதுவும் இன்னைக்கு பின் பக்கமா தாக்குவோம்.. அப்படின்னு சொல்லி புலியை கையோட அழைச்சுட்டு வந்துச்சாம்..
தெய்வாதீனமா இந்த தடவையும் குதிரை இதை பாத்துடிச்சாம்..
சட்டுன்னு அவங்க வர்ற திசைக்கு எதிர் திசையிலே திரும்பி நின்னுக்கிட்டு, ரொம்ப சத்தமா.."இன்னைக்கு எப்படியும் ஒரு புலியை அழைச்சுட்டு வர்றேன்னு சொல்லிட்டு போச்சுது அந்த சனியன் புடிச்ச நரி.. 1 மணி நேரம் ஆகுது.. இன்னும் கானோமே" ன்னு தனக்குள்ளேயே பேசிக்கறமாதிரி சொல்லுச்சாம்..
அப்புறம் என்ன.. நரியின் கதி என்னாச்சு..அப்படிங்கறதெல்லாம் நான் சொல்லியா தெரியணும்..?
.........................
ஒருவன் பழைய கட்டிடத்தினூடே சென்று கொண்டிருந்தான்..
அப்போது " அப்படியே நில்.. அசையாதே.." என்று ஒரு சத்தம். ஆனால் எங்கிருந்து வந்தது எனத் தெரியவில்லை.. என்றாலும் அசையாமல் நிற்க, அவன் போகவிருந்த வழியில் ஒரு சுவர் இடிந்து விழுந்தது. இவன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்..
மற்றொரு நாள்.. பேர்ந்தில் ஏறப் போனபோது மீண்டும் அதே குரல்.. " இந்த பேருந்து வேண்டாம்..". அவனும் அதைத் தவிர்த்து அடுத்த பேருந்தில் செல்லும்போது இவன் சென்றிருக்கவேண்டிய பேருந்து கவிழ்ந்திருப்பதைப் பார்த்தான்..
மிகவும் ஆச்சரியத்துக்குள்ளானவனாய், யார் என்னை ஒவ்வொருமுறையும் காப்பாற்றுவது..?" என நினைத்தான்.. அதற்கும் உடனடியாக பதில் வந்தது.." நான் உன் காவல் தெய்வம்".
இவன் அடுத்தபடியாக கேட்டான்,,
"ஓ காவல் தெய்வமே... என் கல்யாணத்தப்ப எங்கே போய்த் தொலைஞ்சே..?"
...................
Saturday, August 16, 2008
சிரி..சிரி..சிரி..பாகம் - 6
ஒரு ஆரம்பப் பள்ளிக்கு அதிபர் புஷ் வருகை புரிந்தார்.. சிறு உரைக்குப் பின் மாணவர்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்க தயாரானார்..
ஒரு மாணவன் கை உயர்த்தினான்..
புஷ் ; நல்லது.. உன் பெயர் என்ன்..?
மா ; பாப்..
புஷ் ; எது வேண்டுமானாலும் கேள் பாப்..
பாப் ; நன்றி அதிபரே..! என்னிடம் மூன்று கேள்விகள் உள்ளன..
1 ..ஐ.நா.சபை தடுத்தும் கேட்காமல் ஈராக் மீது போர் தொடுத்தது ஏன்..?
2.. திரு. கெர்ரி உங்களைவிட அதிக வாக்குகள் பெற்றிருந்தும் நீங்கள் அதிபர் ஆனது எப்படி..?
3.. ஒசாமா பின் லேடனை பிடிப்பது எப்போது..?
புஷ் பதிலளிக்கத் திணறிக்கொண்டிருக்கும் போது இடைவேளைக்கான மணி அடிக்கவே கேள்வி நேரம் நிறுத்தப்பட்டது.
இடைவேளைக்குப் பின்.. உற்சாகமாக வந்த புஷ். கேள்விகளைத் தொடரச் சொன்னார்.. மிகுந்த தன்னம்பிக்கையுடன்..
ஒரு மாணவன் கை உயர்த்தினான்..
புஷ் ; நல்லது.. உன் பெயர் என்ன்..?
மா ; ஆல்ன்..
புஷ் ; எது வேண்டுமானாலும் கேள் ஆலன்..
ஆலன் ; நன்றி அதிபரே..! என்னிடம் ஐந்து கேள்விகள் உள்ளன..
1 ..ஐ.நா.சபை தடுத்தும் கேட்காமல் ஈராக் மீது போர் தொடுத்தது ஏன்..?
2.. திரு. கெர்ரி உங்களைவிட அதிக வாக்குகள் பெற்றிருந்தும் நீங்கள் அதிபர் ஆனது எப்படி..?
3.. ஒசாமா பின் லேடனை பிடிப்பது எப்போது..?
4.. 20 நிமிடங்கள் முன்னதாகவே இடைவேளைக்கான மணி அடிக்கப் பட்டது ஏன்..?
5.. மாணவன் பாப் எங்கே..? அவனை என்ன செய்தீர்கள்..?
...................
ஜார்ஜ் புஷ்ஷின் கார் டிரைவர் ஒரு பன்றியை இடித்து கொன்றுவிட்டார். ஜார்ஜ் புஷ் பன்றியின் உரிமையாளரை பர்ர்த்து மன்னிப்பு கடக்குமாறு கூறினார். டிரைவர் உள்ளே சென்ரார்.
அவ்வாறே உள்ளே சென்ற டிரைவர் திரும்பி வரும்போது, கை நிறைய பணமும், நிறைய பரிசுப் பொருட்களும் கொண்டுவந்தார். அவரது பன்றியைக் கொன்றதற்காக அவர் கோபிக்கவில்லையா? அவர் பரிசு தருமளவிற்கு என்ன சமாதானம் கூறினாய்? என்று கேட்டார். அதற்கு டிரைவர் சொன்ன பதில்: நான் ஜார்ஜ் புஷ்ஷின் கார் டிரைவர். அந்தப் பன்றியை இப்போதுதான் கார் ஓட்டி கொன்றேன் எனக் கூறினேன்.
...................
வயது முதிர்ந்த பெண்மணி ஒருவர் மாடிப் படியில் இறங்கும்போது கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டது.
மருத்துவர் மாவுக்கட்டு போட்டுவிட்டு " பாட்டி, இன்னும் 1 மாசத்துக்கு மாடிப் படி ஏறக்கூடாது.." என்று சொல்லிப் போனார்.
ஒரு மாதத்துக்குப் பின், மாவுக்கட்டை மருத்துவர் அகற்றும் போது பாட்டி கேட்டாள்..
டாக்டர்.. இனி படியில் ஏறலாமில்லையா..?
ஓ.எஸ்.. தாராளமா..
நன்றி டாக்டர்.. தண்ணி பைப்பை புடிச்சி மாடி ஏறுவது ரொம்பக் கஷ்டமா இருந்திச்சு..!!!
...........................
ஆண் யானையும் பெண் எறும்பும் காதலித்தன.. எறும்பு பெற்றோர் சம்மத்ம் வேண்டி நின்றது. அவர்களும் 2 நாளில் யோசித்து சொல்வதாக கூறினர்..
படபடப்பான 48 மணி நேரத்துக்குப் பிறகு முடிவு அறிவிக்கப்பட்டது.
எங்களுக்கு சம்மதம் இல்லை.. பையனுக்கு பல்லு பெருசா இருக்கு..!!!
...........................
எதுக்குப்பா கல்யாண மாப்பிள்ளையை குதிரையிலே ஏத்திவிடறாங்க..?
தப்பிச்சு போக கடைசியா ஒரு வாய்ப்பு கொடுக்கறாங்க
.........................
ஏதாவது கல்யாணத்துக்கு போனாப் போதும்.. இந்த பாட்டிகள் எல்லாம் வந்து கன்னத்தை கிள்ளி " அடுத்தது உனக்குதான்" ன்னு ரவுசு பண்ணுவாங்க.
இதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டினேன்.. எப்படி தெரியுமா..?
நானும் அவங்களை கிண்டல் பண்ண ஆரம்பிச்சேன்.." அடுத்தது நீதான்" அப்படின்னு... துக்கம் கேட்க போற வீடுகள்லே...!!
.......................
இன்ஸ்பெக்டர்.. என்னை உடனே லாக்-அப் -ல் வையுங்க..
ஏன்.. என்ன ஆச்சு..?
என் மனைவியை கட்டையால் தலையில் அடித்துவிட்டேன்..
செத்துட்டாங்களா..?
இல்லே.. கோபமா வந்துட்டு இருக்கா.. அதனாலதான் சொல்றேன்.. ப்ளீஸ்.. உடனே உள்ள வச்சு பூட்டுங்க..!!
...................
Friday, August 15, 2008
சிரி..சிரி..சிரி..பாகம் - 5
(சைவ ஜோக் தான்)
டைரக்டர் ; ( நடிகையிடம் காட்சியை விவரிக்கிறார்)..மேடம்..உங்கள வில்லன் கெடுக்க வர்றான்..நீங்க அவன்கிட்டே சிக்காம தப்பிச்சு ஒடறீங்க..
நடிகை ; சார்..ரெண்டு நாளா கால்லே சுளுக்கு..என்னாலே ஓட முடியாது..பேசாம வில்லன் ஆசைக்கு இணங்கிடுறேனே..!
டைர"டக்கர்" ; ??????????????????????
...............................
காதலி.. செல் பேசியில் காதலனுடன் உரையாடுகிறாள்..
அன்பே.. ராத்திரி பூரா என் கனவுலே நீங்க வந்து கலக்கினீங்க..
உங்க நினைப்புதான் போங்க..அப்புறம் இன்னைக்கு நாம திட்டம் போட்ட மாதிரி சந்திக்க முடியாது..எங்கம்மா என்னை டாக்டர் கிட்டே அழைச்சுட்டு போறாங்க.. ஏனா..? பாதி ராத்திரியிலே பிசாசைக் கண்ட மாதிரி கத்துறேனாம்..வச்சுடவா.?!!!!!!!!!
.................................
சர்தார் கிராமத்தில் குடும்பக் கட்டுப்பாடு விழிப்புணர்வு விழா.
தலைமை ஏற்ற மந்திரி இவ்வாறு உரையாற்றினார்..
" நம்ம இந்தியாவிலே எங்கேயோ ஒரு பொம்பள 10 வினாடிக்கு 1 பிள்ளை வீதம் பெத்துக்கிட்டு இருக்கா".
வெகுண்டெழுந்த சர்தார் கத்தினார்.."மந்திரி அய்யா, அவளை உடனே கண்டுபிடிச்சு புள்ள பெக்குறதை நிறுத்தச் சொல்லுங்க..!".
..........................
(சைவ ஜோக் தான்)
ராமு ; டேய் சோமு.. எங்கப்பா பயங்கரமா மேஜிக் செய்வாரு..என் பையிலே 1 ரூவா காயினைப் போட்டு உன் பையிலேருந்து எடுப்பாரு..!
சோமு ; ப்ப்பூ.. இது என்னடா பிரமாதம்..? எங்கப்பா ராத்திரி படுக்கறப்போ என் ரூம்லே என்னோட படுப்பார்.. காலையிலே எங்கம்மா ரூம்லேருந்து எழுந்து வருவார்..தெரியுமா?
__________________
(சைவ ஜோக் தான்)
மூணு குடிகாரப்பசங்க பேசிக்கிட்டு இருந்தானுவ. ரெண்டு பயக தாம் பொண்டாட்டியள எப்புடி எப்புடியோ ஆட்டி படப்போமுண்டு ஏகடியம் பண்ணி சிரிச்சானுவ. ஒத்தம் மட்டும் கமுக்கமா இருந்தாம்.
ரவுசுக்காரனுவ இவனயும் கேட்டானுவ..அவம் சொன்னாம்..போங்கடா
பொச கெட்ட பயலுவளா..எம்பொண்டாட்டி நேத்தைக்கு கூட எங்கிட்டெ மண்டி போட்டுக்கிட்டு என்ன சொன்னா தெரியுமாலே ன்னான்.
இவிங்கே அசந்து போயி, " என்னலே சொன்னா" ன்னு ஆர்வமா கேட்டாம்..
அவம் சொன்னானாம்.." ஏம்யா கட்டிலுக்கு கீழே போய் ஃளிஞ்சுக்கிட்டீரு.? ஆம்பளயா வெளியே வந்து சண்ட போடும்யா" ன்னா. நாம் விடல்லியே..விடியற வரைக்கும் அப்பிடியே அவள கத்த விட்ட்னாக்கும் ன்னானாம்.
..........................
வெற்றிகரமான கணவன் யார்?
தன் மனைவி செலவழிப்பதைவிட அதிகம் சம்பாதிப்பவன்..!
வெற்றிகரமான மனைவி ??
அப்படி ஒரு மனிதனைத் தேடிப்பிடித்து திருமணம் செய்து கொள்பவள்..!!
2) கணவன்.. தனக்கு தேவைப்படும் 1 ரூபாய் பொருளை 2 ரூபாய் கொடுத்து வாங்கும் முட்டாள்.
மனைவி.... தனக்கு தேவைப்படாத 2 ரூபாய் பொருளை 1 ரூபாய் கொடுத்து வாங்கும் அதி புத்திசாலி.!
3) நல்ல மனைவி.. கணவனை அதிகம் புரிந்து கொண்டு கொஞ்சமாக நேசிப்பவள்..!
நல்ல கணவன்.... மனைவியை அதிகம் நெசித்தாலும் கொஞ்சம் கூட புரிந்து கொள்ள முயற்சி செய்யாதவன்..!!
.............................
சர்தாரிடம் பணம் இல்லை.. ஒரு பள்ளீச் சிறுவனைக் கடத்தினார்.. ஒரு கடிதம் எழுதினார்.. " உன் மகனை நான் கடத்தி விட்டேன்..இரு லட்சம் கொடுத்தால் உன் மகன் பிழைப்பான். ஒழுங்காக பணத்தை ஒரு பையில் போட்டு என் வீட்டுக் கொல்லையில் வீசிவிடு.. என் வீட்டை உன் மகன் அடையாளம் காட்டுவான்" என்று எழுதி அதை அந்தச் சிறுவனிடமே கொடுத்து அனுப்பினார்..
மறுநாள் அவர் வீட்டுக் கொல்லையில் ஒரு பை கிடந்தது..அதில் பணமும், ஒரு கடித்மும் இருந்தது.
கடிதத்தில், " ஒரு சர்தராய் இருக்கும் உனக்கு, உன் இனத்தைச் சேர்ந்த ஒருவனின் மகனைக் கடத்தி பணம் பிடுங்க எப்படி மனம் வந்தது?" என்று கேள்வி கேட்கப் பட்டிருந்தது..!
................................
தாஜ் மகாலைப் பார்வையிடும் தம்பதி...
மனைவி ; ஷா' மனைவி மேலே எவ்வளவு அன்பு வச்சிருக்கார் பார்தீங்களா ? நீங்களும் இருக்கீங்களே...
கணவன் ; என்ன அப்படி கேட்டுட்டே..இடம், பணம் எல்லாம் ரெடி..
உன் சைடுலே தான் டிலே ஆகுது..!
.........................................
ஒருவர் தாங்க முடியாத வயிற்றுவலியில் துடித்தபடி மருத்துவரிடம் சென்றார்..
மருத்துவர் சிறிய கைவிளக்கு கொண்டு அவர் வாய்க்குள் பரிசோதித்தார்.. பின் மூக்கு, காது எல்லாவற்றையும் விளக்கு அடித்துப் பார்த்துவிட்டு திருப்தியுடன் தலையசைத்தபடி சொன்னார்.. பேட்டரி நல்லா இருக்கு..!!!
.....................
ஒரு முறை சர்வதேச வழக்கறிஞர் மாநாட்டுக்கு சென்ற விமானம் கடத்தப்பட்டது. கடத்தல்காரனின் மிரட்டலுக்கு பணிந்து அரசு அவன் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டது.
அவன் மிரட்டல் என்ன தெரியுமா..?
எனது கோரிக்கைகளுக்கு இணங்காவிட்டால் 1 மணி நேரத்துக்கு 1 வழக்கறிஞர் வீதம் விடுதலை செய்வேன்....!!!!
.......................
சர்தார்ஜி 1: நேத்து ராத்திரி உங்க வீட்டு ஜன்னல் திறந்திருந்துச்சு. அது வழியா நீயும் உன் பொண்டாட்டியும் விளையாடிக்கிட்டு இருந்த்ததைப் பார்த்துட்டேன்
சர்தார்ஜி 2: முட்டாள்! நல்லா ஏமாந்தே. நேத்து ராத்திரி நான் வீட்டிலேயே இல்லை, தெரியுமா!
.....................
இரண்டு சர்தார்ஜிகள் எகிப்தில் உள்ள பிரமிடுகளை சுற்றிப் பார்க்கப் புறப்பட்டார்கள். பிரமிடில் மம்மிக்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு சடலம் மற்ற எல்லா சடலங்களையும் விட மிகவும் நசுங்கி இருந்தது. அதைக் காட்டி ஒரு சர்தார்ஜி சொன்னார், இந்த உடல் நசுங்கி இருப்பதைப் பார்த்தால், அநேகமாக இவன் ஒரு லாரியில் அடிபட்டு இறந்தவனாக இருக்க வேண்டும். மற்றொரு சர்தார்ஜி சொன்னாராம் நீங்கள் சொல்வது உண்மைதான். அவனுக்கு அருகில் பாருங்கள் B.c.2500 என்று லாரியின் நம்பர் பிளேட்டைக் கூட எழுதி வைத்திருக்கிறார்கள் என்று...!!!
...........................
old.
சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்கள் இறந்து சொர்க்கத்திற்கு சென்றனர். ஒவ்வொருவரையும் கடவுள் தனியே சந்தித்து, அவர்களது குழந்தைகளின் எண்ணிக்கை குறித்து கேட்டார். குறைவான குழந்தை உடையவர்களுக்கு அதிகமான பரிசும், அதிகமான குழந்தை பெற்றவர்களுக்கு குறைவான பரிசும் கொடுத்தார். காந்தியும் கடவுளை சந்திக்க உள்ளே சென்றார். ஆனால் வெளியே வரும்போது வெறுங்கையுடன் வந்தார். என்னவென்று மற்றவர்கள் விசாரித்தபோது காந்தி கோபமுடன் சொன்னார்.
யாரோ ஒரு முட்டாள் கடவுளிடம் 'நான் தான் இந்தியாவின் தந்தை' என்று சொல்லியிருக்கிறான்
.................
Thursday, August 14, 2008
சிரி..சிரி..சிரி..பாகம் - 4
அப்பா ஏணி மீது ஏறி நின்றவாறு, கஷ்டப்பட்டு பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தார். அதைப் பார்த்துக் கொண்டிருந்த மகனைப் பார்த்து அம்மா கேட்டாள்:
நீ பெரியவனான பிறகு அப்பாவுக்கு இதிலே ஒத்தாசை செய்வே இல்லே?
ஏன்? அதுவரைக்குமா... முடிக்காம அப்பா பெயிண்ட் அடிச்சிட்டிருப்பார்?
..............................
பையன் (கோபமாக): அம்மா! இன்னைக்குக் காலையிலே நானும் அப்பாவும் பஸ்சுலே போயிக்கிட்டிருந்தபோது ஒரு லேடி வந்தாங்க. அப்பாஎன்கிட்ட, எந்திச்சு அவங்களுக்கு இடம் கொடுக்கச் சொன்னாங்க..!
அம்மா: நல்ல காரியம்தானே!
பையன்: ஆனா நான் உட்கார்ந்துக்கிட்டிருந்தது அப்பாவோட மடியிலே..[/i][/b]
..............................
அமைச்சருடைய குடும்பத்தில் நான்காவது பிள்ளை பிறந்தது. சர்தார்ஜி நண்பர் ஒருவரை அழைத்து குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. முன்னால் பிறந்த மூன்று பையன்களுடைய பெயர் என்ன? என்று கேட்டார் சர்தார்ஜி,
ஒருவன் ரஹ்மத் இலாஹி (கடவுளின் அன்பு) அடுத்தவன் பர்க்கத் இலாஹி (கடவுளின் கருணை) மூன்றாமவன் ம்ஹ்பூப் இலாஹி (ஆண்டவனின் அன்புக்குரியவன்).
சர்தார்ஜி சற்று நேரம் யோசித்துவிட்டு சொன்னார் பஸ்கர் இலாறி (கடவுளே இது போதும்) என்று பெயரிடுங்கள்...!!!
..........................
ஒரு சர்தார் வாழ்க்கை முழுதும் ஒரு விஷயத்துக்கு விடை தெரியாம வெம்பி வீணாகி......நொந்து நூலாகி.......நைந்து நாராகி செத்துப் போனார்..அது..
என் தங்கச்சிக்கு மட்டும் 3 அண்ணன் இருக்காங்க..
எனக்கு மட்டும் ஏன் 2 பேர்தான் இருக்காங்க..????
............................
அமெரிக்க அதிபர் "புஷ்" ஷுக்கு நெடுநாள் ஆசை கார் ஒட்டவேண்டுமென்று. ஒருநாள் ஓட்டுனரை பின்னால் அமரவைத்து ஓட்டிச் சென்றார். ஒட்டுனர் எவ்வளவோ சொல்லியும் கேளாமல் புஷ் அதிவேகத்தில் சென்றதால், காவல்துறையிடம் மாட்டிக் கொண்டார்.
அபராதம் விதிக்கப் போவதாக காவலர் சொல்லவே, புஷ் " நான் யார் தெரியுமா ?' என்று கேட்டார். "சற்றுப் பொறுங்கள்.. கேட்டுச் சொல்கிறேன்" என்ற காவலர் மேலிடத்தோடு தொடர்பு கொண்டார்..
காவலர் ; ஒரு பெரும்புள்ளீயின் கார் வேகக்க் கட்டுப்பாட்டை மீறிவிட்டது.
மேலிடம் ; யார் அந்தப் பெரும்புள்ளி.. மேயரா..?
காவ ; இல்லை..
மேலி ; கவர்னரா..?
காவ ; இல்லை..
மேலி ; நம் அதிபரா..?
காவ ; இல்லை..
மேலி ; அழுக்குப் பன்றியே..வேறு யார் சொல்லித் தொலை..!
காவ ; யாரோ தெரியவில்லை..ஆனால் ஒன்று.. நம் அதிபரையே ஒட்டுனராக வைத்திருக்கும் அளவுக்கு பெரும் புள்ளி ...!!!..........
............................
1) ஆசிரியர் ; மாணவர்களே ! இன்றைய பாடம் " உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்"..! ஒரு மனிதன் ஒரு கழுதையை அடித்து இம்சிக்கிறான்..நான் அதைத் தடுக்கிறேன்.. இதில் இருந்து என்ன தெரிந்து கொண்டீர்கள் ?
மாணவர்கள் ; ( ஒட்டு மொத்தமாக) சகோதர பாசம்..!
Wednesday, August 13, 2008
சிரி..சிரி..சிரி..பாகம் - 3
கம்ப்யூட்டருக்கும் ஏ.சி. க்கும் உள்ள ஒத்துமை என்ன..?
ரெண்டும் "விண்டோஸ்" ஐ ஒப்பன் பண்ணா சொதப்பும்..!!
......................................
(சைவ ஜோக் தான்)
சின்னா ரொம்ப க்யூட். ஆனா அவனுக்கு ஒரு குறை.. அவனோட மக்கு அக்கா மூனாவது படிக்கறா.. புத்திச்சாலியான தன்னை மட்டும் ஒண்ணாங்கிளாஸ்லே சேத்து விட்டுட்டங்களேன்னு..
ஒரு தடவை இதை டீச்சர் கிட்டே சொல்லி வருத்தப்பட்டான். டீச்சர் இதை ஹெட் மாஸ்டர் ட்ட சொன்னாங்க. அவரும் சின்னாவை தன் ரூமுக்கு அழைச்சுட்டு வரச்சொன்னார்.
ஹெட் ; டீச்சர்.. இவனை என் முன்னால 4,5 கேள்வி கேளுங்க பார்ப்போம்..
டீச்சர் ; 2 ம் 2 ம் எவ்ளோ ?
சின்னா ; 4.
டீச்சர் ; 47 ம் 54 ம் எவ்ளோ ?
சின்னா ; 101.
ஹெட் ; என்ன டீச்சர் இது ? கொஞ்சம் கடினமா கேளுங்க...
டிச்சர் ; என் சட்டைக்குள்ள இருக்கு..உன் சட்டைக்குள்ள இல்லே.. அது என்ன ?
சின்னா ; தாலி..!
டீச்சர் ; உன் பேண்ட்டுல இருக்கு.. என் (சுடி) பேண்ட்டுல இல்லே.. அது என்ன ?
சின்னா ; பாக்கெட் !
டீச்சர் ; உங்கம்மாவும் அப்பாவும் ஏன் தனி ரூம்ல படுத்துக்கறாங்க ?
சின்னா ; எனக்கு ஏ.சி. ஒத்துக்காது..!
டீச்சர் ஏதோ மேலும் கேட்க முற்பட..
ஹெட் ; போதும் டீச்சர்.. இவனை 3 என்ன.. 5 ம் கிளாஸ்லேயே தூக்கிப் போடுங்க.. கடைசி 3 கேள்விக்கு எனக்கே தப்பு தப்பா தான் பதில் தெர்ஞ்சது.. இவன் ப்ரில்லியண்ட் தான்..!
.........................................
இது உண்மை நிகழ்ச்சி..
சில வருடங்களுக்கு முன்னர் ஜப்பானிய பிரதமர் அமெரிக்க அதிபரை சந்திக்க ஏற்பாடாகியிருந்தது. அதை முன்னிட்டு ஜப்பானிய பிரதமருக்கு சில ஆங்கில வார்த்தைகளை சொல்லிக் கொடுக்க மன்றாடினார்கள் அதிகாரிகள்.
ஆனால் சுட்டுப் போட்டாலும் அவருக்கு ஆங்கிலம் வரவே இல்லை. கடைசியாக 3 வாக்கியங்களாவது நினைவில் வைத்துக் கொள்ளச் சொல்லிக் கூத்தாடினார்கள். பலன் பூஜ்யம்.
இருந்தாலும் கடைசி நேர முயற்சியாக விமானத்தில் போகும் போது இவ்வாறு சொல்லிக் கொடுத்தனர்..
முதலில் கிளிண்டன் உங்களைச் சந்தித்து கை குலுக்குவார்..நீங்கள் " ஹவ் ஆர் யூ?"(எப்படி இருக்கிறீர்கள்) என்று வினவுங்கள்..அவர் "ஃபைன்..ஹவ் டு யூ டூ?"(நன்றாக உள்ளேன்..நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?) என்று கேட்பார்.. அதற்கு நீங்கள் "மீ டூ..(நானும் தான்..) என்று சொன்னால் போதும் என்று கரைத்து ஊற்றினார்கள்..
கிளிண்டனைச் சந்திக்கும் வேளை வந்தது..
ஜப்பானியப் பிரதமர் மோன் கை குலுக்கியது வரை சரியாகச் செய்தார்..ஆனால் ஹவ் ஆர் யூ என்பதற்கு பதிலாக ஹூ ஆர் யூ ( யார் நீங்கள்) ? என்று கேட்டு விட்டார்.. ஒருவர் முகத்திலும் ஈயாடவில்லை.. என்றாலும் கிளிண்டன் தமக்கே உரிய நகைச்சுவை உணர்வைப் பயன்படுத்தி, " நான் ஹிலாரியின் கணவன்..ஹா..ஹா" என்றார்..
பின்னர் மோன் எந்தத் தப்பும் செய்யாமல் சொல்லிக் கொடுத்தபடியே கடைசி வாக்கியத்தை ஸ்பஷ்டமாக உச்சரித்தார்..!!!
...............................
Tuesday, August 12, 2008
சிரி..சிரி..சிரி.. பாகம் - 2
சர்தார் தன் பழைய நண்பன் ஒருவனை தற்செயலாக சந்தித்தார்..அவனோ குடும்பத்தில் ப்ரச்னை என்று புலம்பினான்..
சர்தார் சொன்னார்..நண்பா ...இதெல்லாம் பிரச்னையே இல்லே... என் குடும்ப சங்கதியக் கேட்டா நீ மயங்கி விழுந்துடுவே..!
நான் ஒரு விதவையைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. அவளுக்கு வயது வந்த மகள் இருந்தா.. அவள எங்கப்பா கல்யாணம் கட்டிக்கிட்டார்..!
அப்போ என் மகள் எனக்கு அம்மா ஆயிட்டா.. ஆனா ஒரு வகையிலே என் அப்பா எனக்கு மருமகனாயிட்டார்.. அதே சமயத்திலே என் மனைவி எங்கப்பாவுக்கு, அதாவது தன் மாமனாருக்கு மாமியாராயிட்டா..!
கொஞ்ச காலம் போயி என் மகள், அதாவது சித்தி ஒரு பையனுக்கு அம்மாவானாங்க..!
எஅந்தப் பொடியன் என்னோட தம்பி முறை.. ஏன்னா அவன் எங்கப்பாவோட புள்ள இல்லியா..?
ஆனா அதே சமயத்திலே என் மனைவியின் மகளின் மகன்.. அதாவது என் மனைவியின் பேரன்..! ஒரு வகையிலே என் தம்பியோட தாத்தா நான்..!
அப்புறம் கொஞ்ச நாள் ஒரு பிரச்னையும் இல்லே..எனக்கும் என் மனைவிக்கும் ஒரு பிள்ளை பிறக்கும் வரை...
இப்போ என் மகனின் சகோதரி.. அதாவது என் சித்தி..ஒரு வகையிலே அவனுக்கு பாட்டி.. இல்லியா.? இன்னொரு குழப்பம் வேறே.. என் அப்பா என் மகனுக்கு மச்சினன் ஆயிட்டார்..!
ஏன்னா.. என் மகனின் சகோதரியை.. அதாவது என் மனைவியின் முன்னாள் மகளும் என் சித்தியுமான அவங்க என் மகனுக்கு அக்கா தானே..?
அப்படிப் பார்த்தா, என் மகனின் அக்காவான என் சித்தி அவங்க மருமகனும், இன்னொரு வகையிலே மாமனாருமான எனக்கு பிறந்த மகனுக்கு மச்சினி
ஆயிட்டாங்க..!
இப்போ என்னாச்சுன்னா, எனக்கு ஒரு மகன் இருக்கான்..எங்க அப்பாவுக்கும் ஒரு மகன் பிறந்திருக்கான்.. அவங்க ரெண்டு பேரும் மாமனும் மருமகனும்.. ! இல்லியா.?
அதாவது எனக்கு சித்தியும் மகளும் மருமகளுமான, என் மனைவிக்கு மகளும் மாமியாருமான, என் தம்பிக்கு அம்மாவும் எனக்கு மகளுமான, என் மனைவியின் மகள் எனக்குப் பிறந்த மகனுக்கு என்ன முறை..?
அத்தையா..? பாட்டியா..? அக்காவா..?
.................................
ஒரு இந்தியன், ஒரு சீனன், ஒரு அமெரிக்கன் மூவரும் தங்கள் நாட்டு மருத்துவ முறைதான் உயர்ந்தது என்று வாதிட்டார்கள்.
அமெரிக்கன் சொன்னான்.." ஒரு ஆள் கால்லே அடிபட்டு பெரிய காயத்தோட தூக்கிட்டு வந்தாங்க.. ஒரே ஒரு ஊசி தான்..உடனே எழுந்து ஓடினான் ..தெரியுமா..?
சீனன் கூறினான்.. ஒரு ஆளுக்கு கை, கால் ரெண்டு இடத்திலேயும் எலும்பு முறிஞ்சுடுச்சு..அக்கு-பங்சர் முறையிலே வைத்தியம் பார்த்ததும் அவன் டான்ஸ் ஆடினான்..இதுக்கு என்ன சொல்றீங்க..?
இந்தியன் சொன்னான்.. இது என்ன பிரமாதம்..? எங்க மாமா மாடு ஓட்டிக்கிட்டு போனப்போ ரயில் மோதிடுச்சு,, மாடும் எங்க மாமாவும் ரெண்டா போயிட்டாங்க.. உடனே மாமாவோட மேல் பகுதியையும், மாட்டோட பின் பகுதியையும் சேர்த்து தைச்சிட்டாங்க..இப்போ மாமா நல்லா நடக்கறார்..அது மட்டுமில்லே..தினம் ரெண்டு லிட்டர் பாலும் தர்றார் !!!!
.....................................
Monday, August 11, 2008
சிரி..சிரி..சிரி..பாகம்-1
ஒரு நாள் எப்படியோ அதே கொசுவை சர்தார் பிடித்து விட்டார்.. கொசு தன் கதை முடிந்ததாக நினைக்க, சர்தாரோ அதற்கு விருந்து வைத்து சிறப்பித்தார்..
பின்னர் அதற்கு ஒரு மென்மையான படுக்கையை எற்பாடு செய்தார்..உபசரிப்பில் மயங்கிய கொசு, தூக்கத்தில் ஆழ்ந்திருக்க, அதன் காதருகில் சென்ற சர்தார் பாடினார்..
"" ங் கீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ""
அதிர்ச்சி அடைந்த கொசு அதே இடத்தில் மாரடைப்பால் மரணம் அடைந்தது..!
..........................
கொலைக் குற்ற்வாளி சார்பில் ஆஜரான வக்கீல் எவ்வளவோ திறமையுடன் வாதாடியும், சந்தர்ப்ப சாட்சியங்களைக் கொண்டு தண்டனை
வழ்ங்கப்படும் சூழ்நிலை. அவருக்கு ஆதரவாக இருந்தது ஒரே ஒரு விடயம் தான். கொல்லப்பட்டவர் பிணம் கிடைக்கவில்லை என்பதே அது.
இதை சாதகமாகக் கொண்டு குற்றவாளியைத் தப்புவிக்க ஒரு தந்திரம் செய்த வக்கீல். " யுவர் ஆனர், உங்களுக்கு ஒரு அச்சர்யமான செய்தி. கொல்லப்பட்டதாக சொல்லப்படும் நபர் இன்னும் 5 நிமிடங்களில் இங்கே வரப்போகிறார்." என்று அறிவித்தார்.
ஒரே பரபரப்பு..எல்லோரும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
5 நிமிடங்கள் கழிந்தன. ஒருவரும் வரவில்லை.
குற்றவாளி வக்கீல் தொண்டையை செருமிக்கொண்டு, "யுவர் ஆனர்..என்னதான் போலீசார் ஆதாரங்களை அள்ளி வீசினாலும், எல்லோருக்கும் ஒருவித சந்தேகம் இருந்ததால் தான் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தோம்.அந்த சந்தேகத்தின் பலன் குற்றம் சாட்டப்பட்டவருக்குப் போகவேண்டும்..அதனால்தான் இவ்வாறு பொய் சொல்ல நேர்ந்தது. தயவு செய்து அவரை விடுதலை செய்யுங்கள்" என்று முழங்கிவிட்டு அமர்ந்தார். அரசு வக்கீல் ஆடிப் போய்விட்டார்.
நீதிபதி தீர்ப்பு வாசித்தார். குற்றவாளிக்கு 7 வருடம் சிறை.
இப்போது குற்றவாளியின் வக்கீல் ஆடிப்போய்க் கேட்டார்.."யுவர் ஆனர், நீங்களும் வாசலைப் பார்த்துக்கொண்டிருந்த்ததை நான் பார்த்தேன். ஆனால் எப்படி ..." என்று இழுத்தார்.
அதற்கு நீதியரசர், " உண்மைதான்..எல்லோரும் வாசலைப் பார்த்துக் கொண்டிருந்த போது குற்றவாளி மட்டும் உம் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போ தான் அவன் குற்றவாளின்னு முடிவு பண்ணினேன். அதுக்கு முந்தி வரைக்கும் அவனை விடுதலை பண்ணிடலாம்ன்னு நெனச்சிருந்தேன்.உங்களுக்கு நன்றி" ன்னு ஒரு அணுகுண்டை போட்டுவிட்டு சேம்பருக்குப் போய்விட்டார்..!!!!!!!
................................
சர்தார் அமெரிக்காவில் உள்ள "நாசா" வில் வேலைக்கு சேர்ந்தார்..
ஒரு மாதம் கழித்து நாசா வின் பெயர் மாற்றப்பட்டு விட்டது..
"சர்வ நாசா"..!!!
.................................
அண்ணா சாலையில் சர்தார் குதிரையில் வந்தார்..
ட்ராபிக் எச்சரிக்கை விளக்கை மதிக்காமல் மேற்கொண்டு செல்லவே காவலர் விசில் ஊதினார்..
சர்தார் குதிரையின் வாலை கையால் தூக்கி, " நம்பர் ப்ளேட் பாத்துக்கோ" என்றார்..!!
......................................
Wednesday, August 06, 2008
அழிச்சாட்டியம்
ஒரு வயதில் மிட்டாயிக்கு
இரு வயதில் பலுனுக்கு
நாலு வயதில் முனு சக்கர வண்டிக்கு
ஏழு வயதில் முழு கால் சட்டைக்கு
பத்து வயதில் கிரிக்கெட் மட்டைக்கு
பன்னிரண்டு வயதில் மிதிவண்டிக்கு
இருபது வயதில் காதலுக்கும்
அழிச்சாட்டியம் செய்கிறோம்
கண்ணீர்.........
உண்ண விரதம் ..
பேச விரதம் ........
துணையுடன்
எல்லாம் சரிதான்
அழிச்சாட்டியம் சாத்தியமாவது இல்லை
ஒரு சமயத்தில் .........
அப்புறம் வருகிறேன் போ,
அடுத்த வருஷம் வந்து கூபிட்டு போ,
வர பிடிக்கவில்லை, விட்டு விடு
இன்னும் கொஞ்சம் வாழ வேண்டும், ப்ளீஸ்
செல்லு படியாகாது சல் ஜப்பு
செய்தது செய்த படி
போட்டது போட்ட படி
விட்டது விட்ட படி
அவனோடு போய் விடுகிறோம்
அழிச்சாட்டியம் அதிகம்
நம்மை விடவும் எமனுக்கு
எங்கோ படித்தது
Tuesday, August 05, 2008
சில சிரிப்பு வெடிகள்
ஒரு முறை நம்ம மொக்ஸ் அவசர அவசரமா ரோட்டுல போயிக்கிட்டு இருந்தாரு, அந்த நேரத்துல ஒரு காக்கா நடு மண்டையில நச்சுனு "கக்கா" போயிடுச்சி,
நம்ம மொக்ஸுக்கு வந்தது பாருங்க கோவம்,"ஏய் காக்கா! உனக்கு அறிவுல்லை, ஜட்டி போடுற பழக்கமெல்லாம் உனக்கு இல்லையான்னு" கத்துனாரு நடு ரோட்டுல....
அதுக்கு அந்த காக்கா கேட்டிச்சாம் "அடங் கொக்கா மக்கா! நீயெல்லாம் ஜட்டியில கக்கா போவியா"ன்னு....
------------------------------------------------------------
சர்தார்: இன்று மழை வரும்னு செய்தியில சொன்னாங்க.
நண்பர்: நீங்க கேட்டீங்களா?
சர்தார்: நான் கேக்கல. அவங்களாதான் சொன்னாங்க...
____________
டாக்டர்: கொசு கடிக்காம இருக்க இந்த க்ரீமைத் தடவுங்க...!
சர்தார்ஜி: அதெப்படி டாக்டர், ஒவ்வொரு கொசுவையும் பிடிச்சி இந்தக் க்ரீமைத் தடவுறது?
____________
நல்ல பசியில் ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றார் நமது சர்தார். சாப்பிட்ட பின் பில்லுக்கான தொகையையும் கட்டிவிட்டார். கிளம்பும் முன் சர்வரிடம் சொன்னார், "வெள்ளரிக்காயை நறுக்கி கண்களில் வைத்துக்கொண்டால், நீ ரொம்ப அழகாயிருப்பே, அப்புறம், வெட்டி வேரில் நனைத்த தேங்காய் எண்ணெயை தலைக்கு தடவினால் உன் தலை முடியும் கருப்பாகி விடும்....." என்று சொல்ல, குழம்பிப்போன சர்வர் கேட்டார், "சார், இதெல்லாம் நீங்க ஏன் எங்கிட்ட சொல்றீங்க?"நம் சர்தார்ஜி சொன்னார், " மக்கு இன்னுமா புரியவில்லை, நான் உனக்கு டிப்ஸ் கொடுத்தேன்"
நன்றி : திரு மோகன்
மருத்துவர்கள் பொறுத்தருள்க..!
டாக்டர் : தினமும் கொஞ்சம் ஓடச் சொன்னது உண்மைதான். அதுக்காக என் பீஸைக் கொடுக்காமல் என்னைப் பார்த்தவுடனே ஓடினா எப்படி?
----------------------------------------------
வந்தவர் : என்ன டாக்டர், இந்த நடு ராத்திரியிலே டிஸ்பென்ஸரியைத் திறந்து வச்சுக்கிட்டு இருக்கீங்க?
டாக்டர் : தூக்கத்துலே நடக்கற வியாதிக்காரன் எல்லாம் இப்பதான் பீஸ் கொண்டுவந்து தருவாங்க.
-----------------------------------------------
ஒருவர் : இந்தச் சின்ன ஆபரேஷனுக்கு ஆயிரம் ரூபாய் பீஸா? சரியான பகல் கொள்ளையாயிருக்கே! டாக்டர் யாரு?
மற்றவர் : தெரியலைங்களே! முகமுடி போட்டிருந்தாரு!
-----------------------------------------------
ஆஸ்பத்திரி நிர்வாகியிடமிருந்து டாக்டருக்கு இப்படி ஒரு குறிப்பு வந்தது :
"டாக்டர்! இந்த மாதத்தில் நீங்கள் இரண்டாக வெட்டிய பதினேழாவது ஆபரேஷன் டேபிள் இது. தயவுசெய்து ஆபரேஷன் செய்யும்போது இத்தனை அழுத்தமாக வெட்டாதீர்கள்."
------------------------------------------------
டாக்டர் : உங்களுடைய நாடித் துடிப்பு ஒரே சீராக ஒரு கடிகாரத்தைப் போலவே இருக்கிறது.
நோயாளி : நீங்கள் இப்போது பிடித்துப் பார்த்துக் கொண்டிருப்பதே என்னுடைய கைகடிகாரத்தைத்தான் டாக்டர்.
------------------------------------------------
டாக்டர் : 37'ம் நம்பர் படுக்கையில் இருந்த பேஷண்ட் எப்படியிருக்கிறார்?நர்ஸ் : அவருக்கு மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்குது... டாக்டர்..
டாக்டர் : ஏன்? என்ன ஆயிற்று அவருக்கு?
நர்ஸ் : என்னைப் பிடிக்க ரூம் முழுவதும் சுற்றி ஓடியதால் ஏற்பட்ட களைப்பு!
-------------------------------------------------
ராணுவ நோயாளி : டாக்டர்! ஏன் இப்படித் தினமும் அடிபட்ட இடத்தில் கீறிக்கீறிப் பார்க்கிறீர்கள்? எனக்கு வலி தாங்க முடியவில்லையே!
டாக்டர் : அடிபட்ட இடத்தில் இருக்கும் குண்டை அகற்ற வேண்டாமா? இன்னும் அது கிடைக்கவில்லையே!
நோயாளி : முன்னமே சொல்வதற்கென்ன? அது என் சட்டைப் பையில்தான் இருக்கிறது.
நன்றி: திரு மோகன் அவர்கள்
Monday, August 04, 2008
அது அது எது?
இடம் 1:
அதான் திருட்டு போன 50 லட்சம் மதிப்பு உள்ள பொருள் மொத்தத்தையும் கண்டுபுடிச்சு லிஸ்ட் போட்டு கொடுத்தாச்சே அப்புறம் என்யே சோகம்மா இருக்குற?
லிஸ்ட்ல அது இல்லிங்களே.
இடம் 2:
கல்யாணமாகி முனு மாசத்துக்குள்ள விவாகரத்து கேக்குற, அவர் வரதச்சனை குட அதிகமா கேக்கவில்லை, ஏன்?
வரதச்சனை கேட்டிருந்தா பரவ இல்லை , ஆனா அவரு என்னை விட அத தான் அதிகமா கொஞ்சுகிறார்
இடம் 3:
ஏன்யா அந்த ஆல போட்டு இந்த அடி அடிக்குற?
பின்ன என்னக்கங்க நான் வாங்கி வச்சது, அத எடுத்துட்டு போயி இவன் சந்தோசமா இருக்குறான்
இடம் 4:
ஏங்க பொண்ணுக்கு முக லட்சணம் ரொம்ப குறைச்சல், அதை எப்படி கட்டிகிட்டான் உங்க பையன்?
அதா? பொண்ணுகுட அதா இலவசம்மா தராத சொன்னேன் உத்துகிட்டான்.
மேலே உள்ள அது எதுன்னு தெரிசுக்கனும்மா-------------------------------------------------
---------
-------------
செய்தி: வரும் 2050 - ஆண்டில் ரோபோடுடன் உடலுறவு கொள்ளலாம் என்று நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
பாக்கியா வார இதழில் படித்து