அப்பா ஏணி மீது ஏறி நின்றவாறு, கஷ்டப்பட்டு பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தார். அதைப் பார்த்துக் கொண்டிருந்த மகனைப் பார்த்து அம்மா கேட்டாள்:
நீ பெரியவனான பிறகு அப்பாவுக்கு இதிலே ஒத்தாசை செய்வே இல்லே?
ஏன்? அதுவரைக்குமா... முடிக்காம அப்பா பெயிண்ட் அடிச்சிட்டிருப்பார்?
..............................
பையன் (கோபமாக): அம்மா! இன்னைக்குக் காலையிலே நானும் அப்பாவும் பஸ்சுலே போயிக்கிட்டிருந்தபோது ஒரு லேடி வந்தாங்க. அப்பாஎன்கிட்ட, எந்திச்சு அவங்களுக்கு இடம் கொடுக்கச் சொன்னாங்க..!
அம்மா: நல்ல காரியம்தானே!
பையன்: ஆனா நான் உட்கார்ந்துக்கிட்டிருந்தது அப்பாவோட மடியிலே..[/i][/b]
..............................
அமைச்சருடைய குடும்பத்தில் நான்காவது பிள்ளை பிறந்தது. சர்தார்ஜி நண்பர் ஒருவரை அழைத்து குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. முன்னால் பிறந்த மூன்று பையன்களுடைய பெயர் என்ன? என்று கேட்டார் சர்தார்ஜி,
ஒருவன் ரஹ்மத் இலாஹி (கடவுளின் அன்பு) அடுத்தவன் பர்க்கத் இலாஹி (கடவுளின் கருணை) மூன்றாமவன் ம்ஹ்பூப் இலாஹி (ஆண்டவனின் அன்புக்குரியவன்).
சர்தார்ஜி சற்று நேரம் யோசித்துவிட்டு சொன்னார் பஸ்கர் இலாறி (கடவுளே இது போதும்) என்று பெயரிடுங்கள்...!!!
..........................
ஒரு சர்தார் வாழ்க்கை முழுதும் ஒரு விஷயத்துக்கு விடை தெரியாம வெம்பி வீணாகி......நொந்து நூலாகி.......நைந்து நாராகி செத்துப் போனார்..அது..
என் தங்கச்சிக்கு மட்டும் 3 அண்ணன் இருக்காங்க..
எனக்கு மட்டும் ஏன் 2 பேர்தான் இருக்காங்க..????
............................
அமெரிக்க அதிபர் "புஷ்" ஷுக்கு நெடுநாள் ஆசை கார் ஒட்டவேண்டுமென்று. ஒருநாள் ஓட்டுனரை பின்னால் அமரவைத்து ஓட்டிச் சென்றார். ஒட்டுனர் எவ்வளவோ சொல்லியும் கேளாமல் புஷ் அதிவேகத்தில் சென்றதால், காவல்துறையிடம் மாட்டிக் கொண்டார்.
அபராதம் விதிக்கப் போவதாக காவலர் சொல்லவே, புஷ் " நான் யார் தெரியுமா ?' என்று கேட்டார். "சற்றுப் பொறுங்கள்.. கேட்டுச் சொல்கிறேன்" என்ற காவலர் மேலிடத்தோடு தொடர்பு கொண்டார்..
காவலர் ; ஒரு பெரும்புள்ளீயின் கார் வேகக்க் கட்டுப்பாட்டை மீறிவிட்டது.
மேலிடம் ; யார் அந்தப் பெரும்புள்ளி.. மேயரா..?
காவ ; இல்லை..
மேலி ; கவர்னரா..?
காவ ; இல்லை..
மேலி ; நம் அதிபரா..?
காவ ; இல்லை..
மேலி ; அழுக்குப் பன்றியே..வேறு யார் சொல்லித் தொலை..!
காவ ; யாரோ தெரியவில்லை..ஆனால் ஒன்று.. நம் அதிபரையே ஒட்டுனராக வைத்திருக்கும் அளவுக்கு பெரும் புள்ளி ...!!!..........
............................
1) ஆசிரியர் ; மாணவர்களே ! இன்றைய பாடம் " உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்"..! ஒரு மனிதன் ஒரு கழுதையை அடித்து இம்சிக்கிறான்..நான் அதைத் தடுக்கிறேன்.. இதில் இருந்து என்ன தெரிந்து கொண்டீர்கள் ?
மாணவர்கள் ; ( ஒட்டு மொத்தமாக) சகோதர பாசம்..!
Thursday, August 14, 2008
சிரி..சிரி..சிரி..பாகம் - 4
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
:))
Post a Comment