Only for guys
1. பசி எடுத்தாலோ அல்லது டீ குடிக்க வேண்டும் என்ற உணர்வு எழுந்தாலோ
கம்பெனிக்கு ஆள் தேடாமல் தனியாக போய் சாப்பிட்டுவிட்டு வாருங்கள்.
2. மாதம் 5 லிட்டருக்கு மேல் பெட்ரோல் போடாதீர்கள். 5*60 = 300
கிலோமீட்டருக்கும் மேல் வண்டி ஓட்ட வேண்டியிருந்தால் (அது உங்கள் சொந்த வேலையாக
இல்லாத பட்சத்தில்) கம்பெனியில் பெட்ரோல் க்ளைம் கேட்டு வாங்குங்கள்.
3. சினிமா, ஷாப்பிங், பொருட்காட்சி, வேறு ஏதேனும் ஷோக்கள் எதுவாயினும்
மாதத்திற்கு ஒன்றுதான் எனத் தீர்மானியுங்கள். திராபை படங்களுக்கும் பத்து
இருபது பேரை இழுத்துச் செல்லாதீர்கள்.
4. வாசிக்கப்படாமல் உங்களிடம் இருக்கும் புத்தகங்களின் பட்டியல் ஒன்றை தயார்
செய்து முகம் பார்க்கும் கண்ணாடி அருகே ஒட்டுங்கள். வேறு பொழுதுபோக்கை மனம்
நாடும்போது படிக்க வேண்டிய புத்தங்கள் கண்முன் நிழலாடும்.
5. காலை உணவு -25; மதியம் உணவு-35; இரவு உணவு - 25; என ஒரு நாளைக்கு அதிகபட்சம்
சாப்பாடு தேவையை ரூ.100/-க்குள் முடிக்க பாருங்கள்.
6. பையில் 200 ரூபாய்க்கு மேல் வைத்து பழகாதீர்கள்.
7. மலிவாக கிடைக்கிறதே என தேவையில்லாததை வாங்காதீர்கள். பிறகு தேவையுள்ளதை
வாங்க பணம் இருக்காது.
8. நாய் பழக்கம் வேட்டியை கிழிக்கும் என்பார்கள். பெண்களுடான பழக்கம் பர்ஸை
பதம் பார்க்கும். கூடுமானவரை ‘கேர்ள் பிரண்டோடு’ ஊர் சுற்றுவதை தவிர்க்கவும்.
முடியாத பட்சம் அவளிடம் ஜபர்தஸ்த் காட்டாமலாவது இருக்க வேண்டும்.
9. சுயமாக முகச்சவரம் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.
10. வண்டி, செல்போன், இரவல் கொடுப்பது, வாங்குவது இரண்டையும் தவிருங்கள்.
11. இரவு சரியான நேரத்திற்கு படுக்கைக்கு செல்லுங்கள். இது பல்வேறு வழிகளில்
உங்களுக்கு உதவும்.
12. உங்கள் துணிகளை நீங்களே துவையுங்கள்.
13. கிரெடிட் கார்டு இருந்தால் இரண்டாக வெட்டி எந்த வங்கியில் வாங்கினீர்களோ
அந்த வங்கிகே திருப்பி அனுப்புங்கள்.
14. மச்சான் ஒரு சிகரெட் வாங்கிகொடுறா, ஒரு காபி சொல்லு மாதிரி சில்லறை
கேஸ்களின் சகவாசத்தை ஒழியுங்கள்
0 comments:
Post a Comment