Wednesday, June 04, 2008

எல்லாம் ஒரு பொது அறிவுதாண்டே.. ஹி!!ஹி!!"

"அண்ணாச்சி! எப்படி இருக்கிய?"

"வாலே மக்கா!! நல்லாத்தான் இருக்கேன்"

"அண்ணாச்சி.. இந்தக் கடற்கரை காவல்படைல ஒரு அம்மா வேலை பார்த்தாவல்லா.."

"யாருலே அது? நம்மூருல ஏது கடற்கரை காவல்படை?"

"அட நீங்க வேற அண்ணாச்சி!! நான் சொல்லுதது டீவில் காட்டுவாங்க்ள்லா "

"எலே அதுல இங்கிலீசுலல்லா பேசுவாவ"

"சர்தான் போங்க. அவுங்க பேசுததை கேக்கவா அதைப் பாக்கோம். ஏதோ சீமைக்காரிய துணிப்பஞ்சத்துல இருக்காவளேன்னு அனுதாபத்துல பாக்கோம்"

"அது சரி. உன் அனுதாபத்தை பழனிவேல் ராஜா கேட்டாரு. சரி இப்ப அதுக்கென்னங்கேன்?"

"இல்ல. அதுல பிரமிளான்னு ஒரு அம்மா நடிக்கும்லா"

"சவத்து மூதி. அது பிரமிளா இல்லலே. பமீலா"

"என்ன எழவோ, பேரா நமக்கு முக்கியம்?"

"அதுசரி. இப்ப என்னத்துக்கு அவளப் பத்தி அக்கறையா விசாரிக்க?"

"இல்ல அந்தம்மா கல்யாணம் கட்டிக்கிட்டாவளாமே அப்படியா?"

"ஏன் நீ கட்டிக்கலாம்னு இருந்தியாக்கும்?"

"சும்மா கிண்டல் பண்ணாதீய அண்ணாச்சி. நெசமாத்தானா?"

"ஆமாலே. என்னமோ இன்னைக்குத்தான் புதுசா கல்யாணம் பண்ணிக்குற மாதிரி சொல்லுத. அந்தம்மாவுக்கு இப்ப இதெல்லாம் ரொம்பப் பழக்கமாப் போச்சு. இது மூணாவது கல்யாணம்"

"அப்ப மொத ரெண்டு பேரு..?"

"லீன்னு ஒரு ஆள் கூட மூணு வருசம் இருந்திருக்காங்க.அதுல ரெண்டு புள்ளைங்க இருக்காங்க. அப்புறம் 2006ல நாலு மாசம் இன்னொருத்தர் கூட இருந்துட்டு 'போதும்'னு போயிட்டாங்களாம்"

"சரி. இப்ப இந்தம்மாவை யாரு கட்டியிருக்கா?"

"ஒருத்தி இருக்காள்லாடே பாரிஸ் ஹில்டன்னு. அவ கூட ஒரு 'மேப்படி' படத்துல நடிச்ச பய ஒருத்தன் இருக்கான் சாலமன் அப்ப்டின்னு. அவனத்தான் கட்டிக்கிட்டாக"

"அதுசரி. இவுகளும் அப்படி படத்துல நடிச்சவுகதானே?"

"அதனால என்னடே?! உன்ன மாதிரி வாய்க்குள்ள என்ன போவுதுனே தெரியாம வாயத் தொறந்து அவுகளைப் பாக்க ஆளிருக்க வரைக்கும் அவுக இஷ்டத்துக்கு ஆடுவாக"

"என்னப் பத்தி அப்படிச்சொல்லிட்டு விலாவாரியா நீங்க மட்டும் எல்லா வெவரமும் அவளப் பத்தி தெரிஞ்சு வச்சிருக்கிய?"

"எல்லாம் ஒரு பொது அறிவுதாண்டே.. ஹி!!ஹி!!"

0 comments:

Post a Comment