Thursday, August 30, 2007

NET - ல் சுட்டவை . . .

எல்லாரிடமும்
பொய்சொல்ல
வேண்டியிருக்கிறது
கண்ணாடியில்
முகம் பார்த்து
சிரிக்கும்போது கூட…

அந்தி வேலைப் பொழுது
அலுவல் முடிவு
அயர்ந்த உடலில்
வியர்வை பூக்கள்
படிகளில் தொங்கியே
பல்லவன் பயணம்
முரட்டு வாகனம்
மிரட்டும் சாலையில்
மூக்கை உரசியது
அவள் வாசனை
அண்ணாந்து பார்த்தேன்
கரிய கூந்தலுடன்
என் இனிய காதலி
மெல்ல குனிந்து
முத்தங்கள் பொழிந்தாள்
என்னைத் தீண்டிய
என் செல்ல மழையே . . .

சுடும் வெயில்
வியர்வை அருவி
நெடுஞ்சாலை
மக்கள் கூட்டம்
காதை பிளக்கும்
வாகன சத்தம்
இது
என் நகர வாழ்க்கை
அவளைத் தொலைத்ததால்
நகரும்
நரக வாழ்க்கை! . . .

உனக்கே தெரியாமல்
உன்னிடம் ஓரு பொக்கிஷம்
ரகசியம் காதைக் கொடு
உன் உள்ளங்கை தான்…

இப்போதெல்லாம்
அடிக்கடி கோவிலுக்கு போகிறேன்
மறு ஜென்மம் உண்டாமே?
உண்டேன்றால்
மறுபடியும் வேண்டுமே
எனக்கு நீ அம்மாவாக!!! . . .

0 comments:

Post a Comment