Tuesday, August 12, 2008

சிரி..சிரி..சிரி.. பாகம் - 2

சர்தார் தன் பழைய நண்பன் ஒருவனை தற்செயலாக சந்தித்தார்..அவனோ குடும்பத்தில் ப்ரச்னை என்று புலம்பினான்..

சர்தார் சொன்னார்..நண்பா ...இதெல்லாம் பிரச்னையே இல்லே... என் குடும்ப சங்கதியக் கேட்டா நீ மயங்கி விழுந்துடுவே..!

நான் ஒரு விதவையைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. அவளுக்கு வயது வந்த மகள் இருந்தா.. அவள எங்கப்பா கல்யாணம் கட்டிக்கிட்டார்..!

அப்போ என் மகள் எனக்கு அம்மா ஆயிட்டா.. ஆனா ஒரு வகையிலே என் அப்பா எனக்கு மருமகனாயிட்டார்.. அதே சமயத்திலே என் மனைவி எங்கப்பாவுக்கு, அதாவது தன் மாமனாருக்கு மாமியாராயிட்டா..!

கொஞ்ச காலம் போயி என் மகள், அதாவது சித்தி ஒரு பையனுக்கு அம்மாவானாங்க..!

எஅந்தப் பொடியன் என்னோட தம்பி முறை.. ஏன்னா அவன் எங்கப்பாவோட புள்ள இல்லியா..?
ஆனா அதே சமயத்திலே என் மனைவியின் மகளின் மகன்.. அதாவது என் மனைவியின் பேரன்..! ஒரு வகையிலே என் தம்பியோட தாத்தா நான்..!

அப்புறம் கொஞ்ச நாள் ஒரு பிரச்னையும் இல்லே..எனக்கும் என் மனைவிக்கும் ஒரு பிள்ளை பிறக்கும் வரை...

இப்போ என் மகனின் சகோதரி.. அதாவது என் சித்தி..ஒரு வகையிலே அவனுக்கு பாட்டி.. இல்லியா.? இன்னொரு குழப்பம் வேறே.. என் அப்பா என் மகனுக்கு மச்சினன் ஆயிட்டார்..!

ஏன்னா.. என் மகனின் சகோதரியை.. அதாவது என் மனைவியின் முன்னாள் மகளும் என் சித்தியுமான அவங்க என் மகனுக்கு அக்கா தானே..?

அப்படிப் பார்த்தா, என் மகனின் அக்காவான என் சித்தி அவங்க மருமகனும், இன்னொரு வகையிலே மாமனாருமான எனக்கு பிறந்த மகனுக்கு மச்சினி
ஆயிட்டாங்க..!

இப்போ என்னாச்சுன்னா, எனக்கு ஒரு மகன் இருக்கான்..எங்க அப்பாவுக்கும் ஒரு மகன் பிறந்திருக்கான்.. அவங்க ரெண்டு பேரும் மாமனும் மருமகனும்.. ! இல்லியா.?

அதாவது எனக்கு சித்தியும் மகளும் மருமகளுமான, என் மனைவிக்கு மகளும் மாமியாருமான, என் தம்பிக்கு அம்மாவும் எனக்கு மகளுமான, என் மனைவியின் மகள் எனக்குப் பிறந்த மகனுக்கு என்ன முறை..?

அத்தையா..? பாட்டியா..? அக்காவா..?
.................................
ஒரு இந்தியன், ஒரு சீனன், ஒரு அமெரிக்கன் மூவரும் தங்கள் நாட்டு மருத்துவ முறைதான் உயர்ந்தது என்று வாதிட்டார்கள்.

அமெரிக்கன் சொன்னான்.." ஒரு ஆள் கால்லே அடிபட்டு பெரிய காயத்தோட தூக்கிட்டு வந்தாங்க.. ஒரே ஒரு ஊசி தான்..உடனே எழுந்து ஓடினான் ..தெரியுமா..?

சீனன் கூறினான்.. ஒரு ஆளுக்கு கை, கால் ரெண்டு இடத்திலேயும் எலும்பு முறிஞ்சுடுச்சு..அக்கு-பங்சர் முறையிலே வைத்தியம் பார்த்ததும் அவன் டான்ஸ் ஆடினான்..இதுக்கு என்ன சொல்றீங்க..?

இந்தியன் சொன்னான்.. இது என்ன பிரமாதம்..? எங்க மாமா மாடு ஓட்டிக்கிட்டு போனப்போ ரயில் மோதிடுச்சு,, மாடும் எங்க மாமாவும் ரெண்டா போயிட்டாங்க.. உடனே மாமாவோட மேல் பகுதியையும், மாட்டோட பின் பகுதியையும் சேர்த்து தைச்சிட்டாங்க..இப்போ மாமா நல்லா நடக்கறார்..அது மட்டுமில்லே..தினம் ரெண்டு லிட்டர் பாலும் தர்றார் !!!!
.....................................

Monday, August 11, 2008

சிரி..சிரி..சிரி..பாகம்-1

ஒரு நாள் எப்படியோ அதே கொசுவை சர்தார் பிடித்து விட்டார்.. கொசு தன் கதை முடிந்ததாக நினைக்க, சர்தாரோ அதற்கு விருந்து வைத்து சிறப்பித்தார்..

பின்னர் அதற்கு ஒரு மென்மையான படுக்கையை எற்பாடு செய்தார்..உபசரிப்பில் மயங்கிய கொசு, தூக்கத்தில் ஆழ்ந்திருக்க, அதன் காதருகில் சென்ற சர்தார் பாடினார்..

"" ங் கீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ""

அதிர்ச்சி அடைந்த கொசு அதே இடத்தில் மாரடைப்பால் மரணம் அடைந்தது..!
..........................

கொலைக் குற்ற்வாளி சார்பில் ஆஜரான வக்கீல் எவ்வளவோ திறமையுடன் வாதாடியும், சந்தர்ப்ப சாட்சியங்களைக் கொண்டு தண்டனை
வழ்ங்கப்படும் சூழ்நிலை. அவருக்கு ஆதரவாக இருந்தது ஒரே ஒரு விடயம் தான். கொல்லப்பட்டவர் பிணம் கிடைக்கவில்லை என்பதே அது.
இதை சாதகமாகக் கொண்டு குற்றவாளியைத் தப்புவிக்க ஒரு தந்திரம் செய்த வக்கீல். " யுவர் ஆனர், உங்களுக்கு ஒரு அச்சர்யமான செய்தி. கொல்லப்பட்டதாக சொல்லப்படும் நபர் இன்னும் 5 நிமிடங்களில் இங்கே வரப்போகிறார்." என்று அறிவித்தார்.

ஒரே பரபரப்பு..எல்லோரும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
5 நிமிடங்கள் கழிந்தன. ஒருவரும் வரவில்லை.

குற்றவாளி வக்கீல் தொண்டையை செருமிக்கொண்டு, "யுவர் ஆனர்..என்னதான் போலீசார் ஆதாரங்களை அள்ளி வீசினாலும், எல்லோருக்கும் ஒருவித சந்தேகம் இருந்ததால் தான் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தோம்.அந்த சந்தேகத்தின் பலன் குற்றம் சாட்டப்பட்டவருக்குப் போகவேண்டும்..அதனால்தான் இவ்வாறு பொய் சொல்ல நேர்ந்தது. தயவு செய்து அவரை விடுதலை செய்யுங்கள்" என்று முழங்கிவிட்டு அமர்ந்தார். அரசு வக்கீல் ஆடிப் போய்விட்டார்.

நீதிபதி தீர்ப்பு வாசித்தார். குற்றவாளிக்கு 7 வருடம் சிறை.
இப்போது குற்றவாளியின் வக்கீல் ஆடிப்போய்க் கேட்டார்.."யுவர் ஆனர், நீங்களும் வாசலைப் பார்த்துக்கொண்டிருந்த்ததை நான் பார்த்தேன். ஆனால் எப்படி ..." என்று இழுத்தார்.

அதற்கு நீதியரசர், " உண்மைதான்..எல்லோரும் வாசலைப் பார்த்துக் கொண்டிருந்த போது குற்றவாளி மட்டும் உம் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போ தான் அவன் குற்றவாளின்னு முடிவு பண்ணினேன். அதுக்கு முந்தி வரைக்கும் அவனை விடுதலை பண்ணிடலாம்ன்னு நெனச்சிருந்தேன்.உங்களுக்கு நன்றி" ன்னு ஒரு அணுகுண்டை போட்டுவிட்டு சேம்பருக்குப் போய்விட்டார்..!!!!!!!

................................

சர்தார் அமெரிக்காவில் உள்ள "நாசா" வில் வேலைக்கு சேர்ந்தார்..

ஒரு மாதம் கழித்து நாசா வின் பெயர் மாற்றப்பட்டு விட்டது..

"சர்வ நாசா"..!!!

.................................
அண்ணா சாலையில் சர்தார் குதிரையில் வந்தார்..
ட்ராபிக் எச்சரிக்கை விளக்கை மதிக்காமல் மேற்கொண்டு செல்லவே காவலர் விசில் ஊதினார்..

சர்தார் குதிரையின் வாலை கையால் தூக்கி, " நம்பர் ப்ளேட் பாத்துக்கோ" என்றார்..!!
......................................

Wednesday, August 06, 2008

நம்பிக்கை வாக்கு எடுப்புக்கு பின்


நன்றி : துக்ளக்

அழிச்சாட்டியம்

ஒரு வயதில் மிட்டாயிக்கு

இரு வயதில் பலுனுக்கு

நாலு வயதில் முனு சக்கர வண்டிக்கு

ஏழு வயதில் முழு கால் சட்டைக்கு
பத்து வயதில் கிரிக்கெட் மட்டைக்கு

பன்னிரண்டு வயதில் மிதிவண்டிக்கு

இருபது வயதில் காதலுக்கும்

அழிச்சாட்டியம் செய்கிறோம்

கண்ணீர்.........

உண்ண விரதம் ..

பேச விரதம் ........

துணையுடன்

எல்லாம் சரிதான்

அழிச்சாட்டியம் சாத்தியமாவது இல்லை

ஒரு சமயத்தில் .........

அப்புறம் வருகிறேன் போ,

அடுத்த வருஷம் வந்து கூபிட்டு போ,

வர பிடிக்கவில்லை, விட்டு விடு

இன்னும் கொஞ்சம் வாழ வேண்டும், ப்ளீஸ்

செல்லு படியாகாது சல் ஜப்பு

செய்தது செய்த படி

போட்டது போட்ட படி

விட்டது விட்ட படி

அவனோடு போய் விடுகிறோம்
அழிச்சாட்டியம் அதிகம்

நம்மை விடவும் எமனுக்கு

எங்கோ படித்தது

Tuesday, August 05, 2008

சில சிரிப்பு வெடிகள்

ஒரு முறை நம்ம மொக்ஸ் அவசர அவசரமா ரோட்டுல போயிக்கிட்டு இருந்தாரு, அந்த நேரத்துல ஒரு காக்கா நடு மண்டையில நச்சுனு "கக்கா" போயிடுச்சி,
நம்ம மொக்ஸுக்கு வந்தது பாருங்க கோவம்,"ஏய் காக்கா! உனக்கு அறிவுல்லை, ஜட்டி போடுற பழக்கமெல்லாம் உனக்கு இல்லையான்னு" கத்துனாரு நடு ரோட்டுல....
அதுக்கு அந்த‌ காக்கா கேட்டிச்சாம் "அடங் கொக்கா மக்கா! நீயெல்லாம் ஜ‌ட்டியில‌ க‌க்கா போவியா"ன்னு....
------------------------------------------------------------
சர்தார்: இன்று மழை வரும்னு செய்தியில சொன்னாங்க.
நண்பர்: நீங்க கேட்டீங்களா?
சர்தார்: நான் கேக்கல. அவங்களாதான் சொன்னாங்க...
____________
டாக்டர்: கொசு கடிக்காம இருக்க இந்த க்ரீமைத் தடவுங்க...!
சர்தார்ஜி: அதெப்படி டாக்டர், ஒவ்வொரு கொசுவையும் பிடிச்சி இந்தக் க்ரீமைத் தடவுறது?
____________
நல்ல பசியில் ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றார் நமது சர்தார். சாப்பிட்ட பின் பில்லுக்கான தொகையையும் கட்டிவிட்டார். கிளம்பும் முன் சர்வரிடம் சொன்னார், "வெள்ளரிக்காயை நறுக்கி கண்களில் வைத்துக்கொண்டால், நீ ரொம்ப அழகாயிருப்பே, அப்புறம், வெட்டி வேரில் நனைத்த தேங்காய் எண்ணெயை தலைக்கு தடவினால் உன் தலை முடியும் கருப்பாகி விடும்....." என்று சொல்ல, குழம்பிப்போன சர்வர் கேட்டார், "சார், இதெல்லாம் நீங்க ஏன் எங்கிட்ட சொல்றீங்க?"நம் சர்தார்ஜி சொன்னார், " மக்கு இன்னுமா புரியவில்லை, நான் உனக்கு டிப்ஸ் கொடுத்தேன்"

நன்றி : திரு மோகன்

மருத்துவர்கள் பொறுத்தருள்க..!

டாக்டர் : தினமும் கொஞ்சம் ஓடச் சொன்னது உண்மைதான். அதுக்காக என் பீஸைக் கொடுக்காமல் என்னைப் பார்த்தவுடனே ஓடினா எப்படி?
----------------------------------------------
வந்தவர் : என்ன டாக்டர், இந்த நடு ராத்திரியிலே டிஸ்பென்ஸரியைத் திறந்து வச்சுக்கிட்டு இருக்கீங்க?
டாக்டர் : தூக்கத்துலே நடக்கற வியாதிக்காரன் எல்லாம் இப்பதான் பீஸ் கொண்டுவந்து தருவாங்க.
-----------------------------------------------
ஒருவர் : இந்தச் சின்ன ஆபரேஷனுக்கு ஆயிரம் ரூபாய் பீஸா? சரியான பகல் கொள்ளையாயிருக்கே! டாக்டர் யாரு?
மற்றவர் : தெரியலைங்களே! முகமுடி போட்டிருந்தாரு!
-----------------------------------------------
ஆஸ்பத்திரி நிர்வாகியிடமிருந்து டாக்டருக்கு இப்படி ஒரு குறிப்பு வந்தது :
"டாக்டர்! இந்த மாதத்தில் நீங்கள் இரண்டாக வெட்டிய பதினேழாவது ஆபரேஷன் டேபிள் இது. தயவுசெய்து ஆபரேஷன் செய்யும்போது இத்தனை அழுத்தமாக வெட்டாதீர்கள்."
------------------------------------------------
டாக்டர் : உங்களுடைய நாடித் துடிப்பு ஒரே சீராக ஒரு கடிகாரத்தைப் போலவே இருக்கிறது.
நோயாளி : நீங்கள் இப்போது பிடித்துப் பார்த்துக் கொண்டிருப்பதே என்னுடைய கைகடிகாரத்தைத்தான் டாக்டர்.
------------------------------------------------
டாக்டர் : 37'ம் நம்பர் படுக்கையில் இருந்த பேஷண்ட் எப்படியிருக்கிறார்?நர்ஸ் : அவருக்கு மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்குது... டாக்டர்..
டாக்டர் : ஏன்? என்ன ஆயிற்று அவருக்கு?
நர்ஸ் : என்னைப் பிடிக்க ரூம் முழுவதும் சுற்றி ஓடியதால் ஏற்பட்ட களைப்பு!
-------------------------------------------------
ராணுவ நோயாளி : டாக்டர்! ஏன் இப்படித் தினமும் அடிபட்ட இடத்தில் கீறிக்கீறிப் பார்க்கிறீர்கள்? எனக்கு வலி தாங்க முடியவில்லையே!
டாக்டர் : அடிபட்ட இடத்தில் இருக்கும் குண்டை அகற்ற வேண்டாமா? இன்னும் அது கிடைக்கவில்லையே!
நோயாளி : முன்னமே சொல்வதற்கென்ன? அது என் சட்டைப் பையில்தான் இருக்கிறது.

நன்றி: திரு மோகன் அவர்கள்

Monday, August 04, 2008

அது அது எது?


இடம் 1:

அதான் திருட்டு போன 50 லட்சம் மதிப்பு உள்ள பொருள் மொத்தத்தையும் கண்டுபுடிச்சு லிஸ்ட் போட்டு கொடுத்தாச்சே அப்புறம் என்யே சோகம்மா இருக்குற?
லிஸ்ட்ல அது இல்லிங்களே.


இடம் 2:

கல்யாணமாகி முனு மாசத்துக்குள்ள விவாகரத்து கேக்குற, அவர் வரதச்சனை குட அதிகமா கேக்கவில்லை, ஏன்?
வரதச்சனை கேட்டிருந்தா பரவ இல்லை , ஆனா அவரு என்னை விட அத தான் அதிகமா கொஞ்சுகிறார்


இடம் 3:

ஏன்யா அந்த ஆல போட்டு இந்த அடி அடிக்குற?
பின்ன என்னக்கங்க நான் வாங்கி வச்சது, அத எடுத்துட்டு போயி இவன் சந்தோசமா இருக்குறான்

இடம் 4:

ஏங்க பொண்ணுக்கு முக லட்சணம் ரொம்ப குறைச்சல், அதை எப்படி கட்டிகிட்டான் உங்க பையன்?
அதா? பொண்ணுகுட அதா இலவசம்மா தராத சொன்னேன் உத்துகிட்டான்.

மேலே உள்ள அது எதுன்னு தெரிசுக்கனும்மா-------------------------------------------------

---------

-------------

செய்தி: வரும் 2050 - ஆண்டில் ரோபோடுடன் உடலுறவு கொள்ளலாம் என்று நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
பாக்கியா வார இதழில் படித்து