Wednesday, August 13, 2008

சிரி..சிரி..சிரி..பாகம் - 3

கம்ப்யூட்டருக்கும் ஏ.சி. க்கும் உள்ள ஒத்துமை என்ன..?
ரெண்டும் "விண்டோஸ்" ஐ ஒப்பன் பண்ணா சொதப்பும்..!!
......................................
(சைவ ஜோக் தான்)
சின்னா ரொம்ப க்யூட். ஆனா அவனுக்கு ஒரு குறை.. அவனோட மக்கு அக்கா மூனாவது படிக்கறா.. புத்திச்சாலியான தன்னை மட்டும் ஒண்ணாங்கிளாஸ்லே சேத்து விட்டுட்டங்களேன்னு..
ஒரு தடவை இதை டீச்சர் கிட்டே சொல்லி வருத்தப்பட்டான். டீச்சர் இதை ஹெட் மாஸ்டர் ட்ட சொன்னாங்க. அவரும் சின்னாவை தன் ரூமுக்கு அழைச்சுட்டு வரச்சொன்னார்.

ஹெட் ; டீச்சர்.. இவனை என் முன்னால 4,5 கேள்வி கேளுங்க பார்ப்போம்..

டீச்சர் ; 2 ம் 2 ம் எவ்ளோ ?

சின்னா ; 4.

டீச்சர் ; 47 ம் 54 ம் எவ்ளோ ?

சின்னா ; 101.

ஹெட் ; என்ன டீச்சர் இது ? கொஞ்சம் கடினமா கேளுங்க...

டிச்சர் ; என் சட்டைக்குள்ள இருக்கு..உன் சட்டைக்குள்ள இல்லே.. அது என்ன ?

சின்னா ; தாலி..!

டீச்சர் ; உன் பேண்ட்டுல இருக்கு.. என் (சுடி) பேண்ட்டுல இல்லே.. அது என்ன ?

சின்னா ; பாக்கெட் !

டீச்சர் ; உங்கம்மாவும் அப்பாவும் ஏன் தனி ரூம்ல படுத்துக்கறாங்க ?

சின்னா ; எனக்கு ஏ.சி. ஒத்துக்காது..!

டீச்சர் ஏதோ மேலும் கேட்க முற்பட..

ஹெட் ; போதும் டீச்சர்.. இவனை 3 என்ன.. 5 ம் கிளாஸ்லேயே தூக்கிப் போடுங்க.. கடைசி 3 கேள்விக்கு எனக்கே தப்பு தப்பா தான் பதில் தெர்ஞ்சது.. இவன் ப்ரில்லியண்ட் தான்..!

.........................................

இது உண்மை நிகழ்ச்சி..

சில வருடங்களுக்கு முன்னர் ஜப்பானிய பிரதமர் அமெரிக்க அதிபரை சந்திக்க ஏற்பாடாகியிருந்தது. அதை முன்னிட்டு ஜப்பானிய பிரதமருக்கு சில ஆங்கில வார்த்தைகளை சொல்லிக் கொடுக்க மன்றாடினார்கள் அதிகாரிகள்.
ஆனால் சுட்டுப் போட்டாலும் அவருக்கு ஆங்கிலம் வரவே இல்லை. கடைசியாக 3 வாக்கியங்களாவது நினைவில் வைத்துக் கொள்ளச் சொல்லிக் கூத்தாடினார்கள். பலன் பூஜ்யம்.

இருந்தாலும் கடைசி நேர முயற்சியாக விமானத்தில் போகும் போது இவ்வாறு சொல்லிக் கொடுத்தனர்..

முதலில் கிளிண்டன் உங்களைச் சந்தித்து கை குலுக்குவார்..நீங்கள் " ஹவ் ஆர் யூ?"(எப்படி இருக்கிறீர்கள்) என்று வினவுங்கள்..அவர் "ஃபைன்..ஹவ் டு யூ டூ?"(நன்றாக உள்ளேன்..நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?) என்று கேட்பார்.. அதற்கு நீங்கள் "மீ டூ..(நானும் தான்..) என்று சொன்னால் போதும் என்று கரைத்து ஊற்றினார்கள்..

கிளிண்டனைச் சந்திக்கும் வேளை வந்தது..
ஜப்பானியப் பிரதமர் மோன் கை குலுக்கியது வரை சரியாகச் செய்தார்..ஆனால் ஹவ் ஆர் யூ என்பதற்கு பதிலாக ஹூ ஆர் யூ ( யார் நீங்கள்) ? என்று கேட்டு விட்டார்.. ஒருவர் முகத்திலும் ஈயாடவில்லை.. என்றாலும் கிளிண்டன் தமக்கே உரிய நகைச்சுவை உணர்வைப் பயன்படுத்தி, " நான் ஹிலாரியின் கணவன்..ஹா..ஹா" என்றார்..
பின்னர் மோன் எந்தத் தப்பும் செய்யாமல் சொல்லிக் கொடுத்தபடியே கடைசி வாக்கியத்தை ஸ்பஷ்டமாக உச்சரித்தார்..!!!
...............................

3 comments:

said...

நண்பா மொத போனி ஆஜர்ன்னு இப்போ போட்டுக்குறேன் ..

said...

ஏற்கனவே படித்த ஜோக்குகள் தான்..
இருந்தாலும் அவற்றை நினைவு படுத்தியதற்கு நன்றி..
ஆசிரியர் மாணவன் ஜோக் A கிளாஸ் ..

said...

/
கம்ப்யூட்டருக்கும் ஏ.சி. க்கும் உள்ள ஒத்துமை என்ன..?
ரெண்டும் "விண்டோஸ்" ஐ ஒப்பன் பண்ணா சொதப்பும்..!!
/

கலக்கல்

Post a Comment