Wednesday, February 27, 2008

உங்கள்ளுக்காக

வளமையானவாழ்விற்காகஇளமைகளைதொலைத்ததுர்பாக்கியசாலிகள்!
வறுமை என்றசுனாமியால்அரபிக்கடலோரம்கரை ஒதுங்கியஅடையாளம் தெரிந்தநடை பிணங்கள்!
சுதந்திரமாகசுற்றி திரிந்தபோதுவறுமை எனும்சூறாவளியில் சிக்கியதிசை மாறிய பறவைகள்!
நிஜத்தை தொலைத்துவிட்டுநிழற்படத்திற்குமுத்தம் கொடுக்கும்அபாக்கிய சாலிகள்!
தொலைதூரத்தில்இருந்து கொண்டேதொலைபேசியிலேகுடும்பம் நடத்தும்தொடர் கதைகள்!
கடிதத்தை பிரித்தவுடன்கண்ணீர் துளிகளால்கானல் நீராகிப் போகும்மனைவி எழுதியஎழுத்துக்கள்!
ஈமெயிலிலும்இண்டர்நெட்டிலும்இல்லறம் நடத்தும்கம்ப்யூட்டர் வாதிகள்!
நலம் நலமறியஆவல் என்றால்பணம் பணமறியஆவல் என கேட்கும்ஏ.டி.எம். மெஷின்கள்!
பகட்டானவாழ்க்கை வாழபணத்திற்காகவாழக்கையைபறி கொடுத்தபரிதாபத்துக்குரியவர்கள்!
ஏ.சி.காற்றில்இருந்துக் கொண்டேமனைவியின்மூச்சுக்காற்றைமுற்றும் துறந்தவர்கள்!
வளரும் பருவத்திலேவாரிசுகளைவாரியணைத்துகொஞ்சமுடியாதகல் நெஞ்சக்காரர்கள்!
தனிமையிலேஉறங்கும் முன்தன்னையறியாமலேதாரை தாரையாகவழிந்தோடும்கண்ணீர் துளிகள்!
அபஷி என்ற அரபிவார்த்தைக்குஅனுபவத்தின் மூலம்அர்த்தமானவர்கள்!
உழைப்பு என்றஉள்ளார்ந்த அர்த்தத்தைஉணர்வுபூர்வமாகஉணர்ந்தவர்கள்!
முடியும் வரைஉழைத்து விட்டுமுடிந்தவுடன்ஊர் செல்லும்நோயாளிகள்!
கொளுத்தும் வெயிலிலும்குத்தும் குளிரிலும்பறக்கும் தூசிகளுக்கும்இடையில் பழகிப்போனஜந்துகள்!
பெற்ற தாய்க்கும்வளர்த்த தந்தைக்கும்கட்டிய மனைவிக்கும்பெற்றெடுத்த குழந்தைக்கும்உற்ற குடும்பத்திற்கும்இடைவிடாது உழைக்கும்தியாகிகள்!

0 comments:

Post a Comment