“வாயை வச்சுக்கிட்டு சும்மா இரு!” - அப்படின்னு சொல்றது உண்டு.
அது எப்படி வாயை வச்சிக்கிட்டு சும்மா இருக்க முடியும்?
ஒண்ணு பேசணும். இல்லேன்னா சாப்பிடணும்.இது ரெண்டுல ஏதாவது ஒரு வேலைய வாய் செஞ்சுக்கிட்டுத்தான் இருக்கும். இது தான் நம்ம பழக்கம். இருந்தாலும் பெரியவங்க என்ன சொல்றாங்கன்னா பேச்சையும் குறைத்துக் கொள், சாப்பாட்டையும் குறைத்துக் கொள். உடம்பும் நல்லா இருக்கும், மனசும் நல்லா இருக்கும். இது தான் அவர்கள் சொல்கிற அறிவுரை
ஒரு பொன்மொழியும் சொல்றது உண்டு. “மனிதனுக்கு இரண்டுவிதமான பலகீனங்களாம். ஒண்ணு, சும்மா இருக்கவேண்டிய நேரத்தில பேசறது, இன்னொண்ணு, பேசவேண்டிய நேரத்திலே சும்மா இருக்கிறது! பேச்சு பெரியதுதான். இருந்தாலும் மெளனம் அதைவிடப் பெரியதுன்னு சொல்லுவாங்க”
இதையெல்லாம் விளக்கறதுக்கு வேடிக்கையா ஒரு கதை சொல்றது உண்டு.
ஒரு ஊர்லே ஒரு புதுப்பாலம் கட்டினாங்க. கட்டி முடிச்சதும் அதைத் திறந்து வைக்கறதுக்கு ஒரு பெரிய விழா ஏற்பாடு பண்ணினாங்க. அமைச்சர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் எல்லாரும் வந்திருக்காங்க. குறுக்கே ஒரு ரிப்பனைக் கட்டினாங்க. அமைச்சர் அதை வெட்டி - போக்குவரத்தை ஆரம்பிச்சு வைக்கிறார். முதல்ல அவருடைய கார் போகுது. அதைத் தொடர்ந்து அதிகாரிகள் கார். அப்பறம் பொதுமக்கள் வாகனங்கள். போக்குவரத்து கோலாகலமா ஆரம்பமாச்சு.
அந்த விழாவுல ஒரு பரிசுத்திட்டம், நூறாவதாக வர்ற வாகனத்துக்குப் பண்முடிப்பு 10 ஆயிரம் ரூபாய் கொடுக்கறாகத் திட்டம். நூறாவது கார் வருது. அதைத் தடுத்து நிறுத்தினாங்க. கார் ஓட்டிக்கிட்டு வந்தவரைக் கீழே இறங்கச் சொல்லி பணமுடிப்பைக் கொடித்தாங்க. எல்லாரும் கைத் தட்டினாங்க. ஒரு அதிகாரிக் கேட்டார், ” இந்த பணத்தை வைச்சு என்ன பண்ண போறீங்க”
அந்த ஆள் சொன்னார்: “டிரைவிங் லைலென்ஸ் வாங்கனும்”. அதிகாரிங்களுக்கு ஒரே அதிர்ச்சி. “அப்படீன்னா driving license இல்லாமலா வண்டி ஓட்டிக்கிட்டு வர்றான்?”. காருக்குள்ளே இருந்த அவருடைய மனைவி நிலைமையைப் புரிஞ்சிக்கிட்டாங்க. கணவனைக் காப்பாத்தணும். உடனே வாயைத் திறந்தாங்க. ” ஐயா ! அவர் சொல்றத நம்பாதீங்க. அவர் குடிபோதையில இருக்கும்போது அப்படி தான் உளறுவார்”
அதிகாரிக்களுக்கு மேலும் அதிர்ச்சி. “இவன் குடிச்சிட்டு வேற வண்டி ஓட்டுறானா ?”. காருக்குள்ளே இருந்த அவனோட அப்பா இதைக் கேக்கறார். அவருக்கு சரியா காது கேக்காது. மெதுவா முனக ஆரம்பிச்சார். “இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னான்… ரோட்ல நிக்கற காரைத் திருடாதேன்னு, கேட்டியா நீ, இப்ப மாட்டிக்கிட்டு முழிக்கிற”
அதிகாரிகளுக்கு மேலும் அதிர்ச்சி. “ஓ இது திருட்டுக் காரா?”
வாயை வச்சிக்கிட்டு சும்மா இருக்க தெரியாததுனால இவங்க வம்புல மாட்டிக்கிட்டாங்க பாருங்க. ஆனாலும் இந்த பழமொழி அவங்களுக்காக சொல்லப்பட்டதில்ல. நல்ல மனிதர்களுக்கு சொல்லப்பட்டது
பேசவேண்டிய நேரத்தில பேசவேண்டும். சும்மா இருக்கவேண்டிய நேரத்தில் சும்மா இருக்க வேண்டும்”
- தென்கச்சி சுவாமிநாதனின் இந்த நாள் இனிய நாள் புத்தகத்தில் இருந்து ஒரு கதை
Wednesday, February 27, 2008
வாயால் வந்த வினை
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment