அலுவலகத்தில் அனைத்து மக்களும் கலந்து கொண்ட ஒரு கான்ஃபரன்ஸில் பேசிய பெரும் தலை ஒன்று அனைவரும் ‘KISS’ ஐ கடைபிடிக்க வேண்டும். IT கம்பெனிகளில் நிச்சயமாக KISS எல்லா இடங்களிலும் இருக்க வேண்டும் என்று சொன்னபோது சங்கோஜமாக நெளிந்தனர் சிலர். புரியாமல் விழித்தனர் சிலர்.
பிறகு அவரே தொடர்ந்தார். KISS என்பது keep it simple, stupid என்பதன் சுருக்கம். நீங்கள் வேறு ஏதோ நினைவுகளில் மூழ்க வேண்டாம். பணி நிமித்தமான மின்னஞ்சல் பரிமாற்றங்களானாலும் சரி, கலந்துரையாடல்களானாலும் சரி, அலுவலக புராஜக்ட் டிசைன் ஆனாலும் சரி எந்த பணியாக இருந்தாலும் அதை எளிமையாகவும் அனைவருக்கும் புரியும் படியாக சொல்லவேண்டும் என்பது மிகவும் முக்கியம். அதைத் தான் KISS என்கிறார்கள் என்று விளக்கம் கொடுத்தார்.
சிக்கலான ஒரு பணியைச் செய்தாலும் அதை அடுத்தவர்கள் புரியும் விதமாக கோப்புகளில் பதிவு செய்து வைப்பது அடுத்து ஒருவர் அதே பணியை செய்ய நேர்ந்தால் அவருக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும்.
KISS - உதடுகளில் மட்டுமல்ல, மனசிலும் இருக்கணும் போல !
0 comments:
Post a Comment