நண்பா உன் எதிர்காலம்
நீ காணும் கனவுகளில்தான் இருக்கிறது!
அதனால… சீக்கிரமா
தூங்கப் போடா கண்ணு!
உன்னை யாரவது
லூசுன்னு சொன்னா
கவலை படாதே!
வருத்த படாதே!
ஃபீல் பண்ணாதே!
உங்களுக்கு எப்படி
தெரியும்ன்னு கேள்!
ஆடினாதான் மயிலு,
பாடினாதான் குயிலு,
ஓடினாதான் ரெயிலு,
உள்ளப்போனா ஜெயிலு,
வெளியில வர பெயிலு,
நண்பா எஸ்.எம்.எஸ். அனுப்புனாதான்
‘மொபைலு’
பாம்பாட்டி பாம்பைக் காட்டி
பொழப்பு நடத்தறான்.
குரங்காட்டி வித்தை காட்டி
பொழப்பு நடத்தறான்.
நீ மட்டும் எப்படி மாமு
பல்லைக் காட்டியே பொழப்பை ஓட்டறே?
நான் கோடு போட்டா
நீ ரோடு போடுவே.
நான் புள்ளி வெச்சா
நீ கோலம் போடுவே.
நான் மிஸ்டுகால் கொடுத்தா மட்டும்
நீ ஏண்டா திரும்ப
கூப்பிட மாட்டேங்கிறே?
காதல்
ஒரு மழை மாதிரி,
நனையும் போது
சந்தோஷம்.
நனைந்த பின்பு
ஜலதோஷம்.
வாழை மரம்
‘தார்’ போடும்
ஆனால் அதை வச்சு
நம்மால
‘ரோடு’ போட முடியாதே!
மாடுக்கும் மனுஷனுக்கும் என்ன வித்தியாசம்?
மாடு கழுத்துல பெல்லு…
மனுஷன் கழுத்துல செல்லு!
ஏழு பரம்பரைக்கு
உக்காந்து சாப்பிட
பணம் இருந்தாலும்
ஃபாஸ்ட் ஃபுட் கடையிலே
நின்னுக்கிட்டுதான்
சாப்பிடணும்.
என்னதான் ஒருத்தன்
‘குண்டா’யிருந்தாலும்,
அவனைத் துப்பாக்கிக்குள்ளே
போட முடியாது.
இன்பத்திலும் சிரி,
துன்பத்திலும் சிரி,
சிரிச்சுக்கிட்டே இரு
கோல’ மாவில்’ பூரி போட முடியாது
அப்பதான் நீ லூசுன்னு
எல்லாரும் நம்புவாங்க………
காலிஃ பிளவரை’ தலையில் வைக்க முடியாது
எலக்ட்ரி’ சிட்டி’யில் தங்க முடியாது
கள்ளிப்’ பாலில்’ காபி போட முடியாது
கோல’ மாவில்’ பூரி போட முடியாது
கோல்டு’ பில்டரை அடகு வைக்க முடியாது
- இது மாதிரி
உன்னையும் குளிக்க வைக்க முடியாது!
மகனே பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது
ஐந்து கேள்விப்பா
நீ எத்தனை கேள்வி விட்டுட்டே
முதல் மூணும் கடைசி இரண்டும்
வெரிகுட் கீபிடப்
நண்பா நீ கம்ப்யூட்டர் முன்னாடி உட்காந்தா, அது என்ன நினைக்கும் தெரியுமா?
Intel inside
Mental outside !!!
டேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.
இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு
???????
அம்மா நான் இன்னிக்கி ஸ்கூல் போகலை
நீ போய்தான் ஆகனும் கண்ணா !
எனக்கு ஸ்கூலே பிடிக்கலை.பசங்க எல்லாம் மோசமானவங்களா இருக்காங்க
அதபற்றி உனக்கென்னா நீ பாட்டுக்கு ஸ்கூலுக்கு போ
உனக்கு தெரியாதும்மா அது ஸ்கூலே இல்லை ரௌடிங்க நடமாடற இடம். என்னை தினமும் எப்படி பயமுறுத்துராங்க தெரியுமா ?
நீ என்ன காரணம் சொன்னலும் சரி. கண்டிப்பா ஸ்கூல்லுக்கு போறே
நான் ஏன் இப்படி மோசமனவங்க இருக்குற இடத்துக்கு போகணும் ?
நீ தானேடா கண்ணா பிரின்ஸிபால் . நீயே போகாம அடம்புடிச்சா எப்படி?
என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க?
டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பன்னிக்க சொன்னார் அதான்.
“டேய்… ஏண்டா காலேஜுக்கு போகலையா?”
”இன்னைக்கு லீவு டாடி”
“ஏண்டா…பக்கத்து வீட்டு பையன் காலேஜுக்குப் போறான். நீ என்னடான்னா லீவுங்கிற?”
“எதிர் வீட்டு பொண்ணு லீவு டாடி”
அப்பா 5 + 5 எவ்வளவு?
மடையா, அறிவு இல்லே, வெட்கமாக இல்லே உனக்கு, இது கூட தெரியாதா? சரி, சரி அந்த கால்குலேட்டரை எடுத்து வா நான் பார்த்து சொல்றேன்.
நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்.
டாக்டர் என் மனைவி ஓவரா டி.வி. பாக்குறா”
எந்த அளவுக்கு பாக்குறாங்க?
”கரண்ட் கட்டானாலும், டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு!!!
வக்கீல்: உனக்கு திருமணமாகிவிட்டதா?
சர்தார்: ஆகிவிட்டது.
வக்கீல்: யாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாய்?
சர்தார்: ஒர் பெண்ணை.
வக்கீல்: பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து கொள்வார்கள்?
சர்தார்: ஆம் என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!..
சார், டீ மாஸ்டர்
டீ போடறாரு,
பரோட்டா மாஸ்டர்
பரோட்டா போடறாரு,
மேக்ஸ் மாஸ்டர்
மேக்ஸ் போடறாரு,
நீங்க ஹெட்மாஸ்டர் தானே
ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?…
என்னதான் கிளி கீ..கீ.. என்று கத்தினாலும்,
அதால ஒரு லாக்கை கூட ஒப்பன் பண்ண முடியாது.
ஏண்டா எல்லா செல் நம்பரும் 9-லயே ஆரம்பிக்குது?
”அது வந்து…செல் போனை ஒண்ணு ஆம்பிளைங்க யூஸ் பண்ணனும். இல்லன்னா… பொம்பளைங்க யூஸ்பண்ணனும். ரெண்டு பேருமே யூஸ் பண்ற பொருளா செல்போன் இருக்கிறதாலதான் செல்போன் நம்பரையெல்லாம் ‘9′ -லயே ஆரம்பிக்கிற மாதிரி வச்சிட்டாங்க”
”பரதேசி உன்கிட்டப் போய் நான் கேட்டேன் பாரு”
டாக்டர் இந்த பக்கெட் ஓட்டை ஆயிடுச்சு.. என்ன பண்ணலாம்.
யோவ். எங்கிட்ட வந்து ஏன் இதை கேட்கிறாய்?
பிளாஸ்டிக் சர்ஜரில நீங்கதான் பேமஸ்ன்னு சொன்னாங்க..
ஒரு சீனா நாட்டு தம்பதிக்கு முதல் குழந்தை,அவங்களை மாதிரியே நல்லா சிகப்பா பிறந்தது. அதுக்கு ”சிங்- சாங்-பங்” குன்னு பேர் வச்சாங்க. இரண்டவது குழந்தையும் கொளுகொளுன்னு சிகப்பா பிறந்தது. அதுக்கு ”ரீங்- சாங்- சிங்”குன்னு பேர் வச்சாங்க. ஆனா… மூணாவதா பிறந்த குழந்தை, நீக்ரோ மாதிரி கறுப்பா பிறந்தது. அதுக்கு என்ன பேர் வச்சிருப்பாங்க? ”தெரியலையே”
”சம்- திங்-ராங்”குன்னு.
”நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க”
”அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை…. பத்திரமா இருக்கும்”
SMS Joke
ஒரு காப்பி எவ்வளவு சார் ?
5 ரூபாய்.
எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே ?
டேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா!
7/ஜி செல்போன் காலனி -
செல் பேசும் வார்த்தை புரிவதில்லை
காத்திருந்தால் மெசேஜ் வருவதில்லை
ஒரு முறை அனுப்பி மருமுறை அனுப்ப
நான் ஒன்றும் கிருக்கன் இல்லை
எனக்கு பில் கட்ட வழியும் இல்லை
பிகர் இருந்தும் எஸ்.எம்.எஸ். அனுப்ப
நெட்வெர்க் கவரேஜ் கிடைப்பதேயில்லை
கஸ்டமர் கேர்க்கு கால் பண்ணினா
பதில் ஒண்ணும் கிடைப்பதில்லை
ஒருமுறை தான் கால் செய்வதினால்
வருகிற பில் அவள் அறிவதில்லை…
இரவினிலும் தினம் பகலினிலும்
கரைகிற பேலன்ஸ் தெரிவதில்லை.
டைபிஸ்ட் வேலை கேட்டு வந்திருக்கியே… முன் அனுபவம் இருக்கா… என்ன ஸ்பீடு ?” ”நிமிஷத்துக்கு இருபது பேருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புவேன் சார்…!
உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்.
அந்தத் திருடனைப் பிடிக்க முடியாதுன்னு எப்படிச் சொல்றீங்க?” அவனோட செல் நெம்பர்ல ட்ரை பண்ணினேன்.not reachableனு வந்தது சார்…!”
உங்க மனைவிக்கு நாய் கடிச்சதா கேள்விப்பட்டேன் நீங்க முதல்ல என்ன செய்திங்க?
உடனே அந்த நாய்க்கு பிரியாணி வாங்கி போட்டேன்.
வாளமீன் - எஸ் எம் எஸ்
வின்டோஸ்க்கும் லினக்ஸ்க்கும் கல்யாணம்.
அந்த அப்ளிகேஷன் சாப்ட்வேர் எல்லாம் ஊர்வலம்.
இன்டர்நெட்டில் நடக்குதய்யா திருமணம்.
அந்த டிவைஸ் டிரைவர்க்கு எல்லாம் கும்மாளம்.
கல்யாணமா கல்யாணம்.கல்யாணமா கல்யாணம்.
மாப்பிள்ளை சி ஸ்ட்ராங்கான ஆளுங்கோ,
மணப்பொண்ணு சி+ + தானுங்கோ,
இந்த திருமணத்தை நடத்தி வைக்கும் பெரிய மனுஷர் யாருங்கோ…?
தலைவரு பில்கேட்ஸ் தானுங்கோ.
ஒருவர் ரோட்டில் நடந்து சென்ற போது நடு ரோட்டில் கருப்பாக ஏதோ கிடப்பதை கண்டு அதை தன்விரலால் தொட்டு நக்கி பார்த்து “சீ சீ சாணி நல்லவேளை மிதிக்கலை என்று சந்தோசமாக சென்றார்.
இன்னிக்கி 8 மணிக்கு கடுமையான மழையும் காற்றும் வரும்னு டி.வி யில சொன்னாங்க.
நீங்க கேட்டீங்களா?
இல்லை அவங்களே சொன்னங்க…
பெப்ஸிக்கு சூர்யா… கோக்குக்கு விஜய்… ஃபேண்டாவுக்கு சிம்ரன்… கவலையே படாதே மாமு’ கோலி சோடவுக்கு உன்னை விட்டா யாரும்மில்லை’
நான் மெகா சீரியல் ஆரம்பிக்கப் போற விஷ்யம் கமல் சாருக்கு தெரிஞ்சு போச்சு போல … ஜவ் பண்ணுட மகனே ஜவ் பண்ணுட’னு எனக்கு எஸ்.எம்.எஸ்.அனுப்பியிருக்கார்
என்னதான் நீங்க புத்திசாலியாக இருந்தாலும் பல்லு விலக்கும் போது இளிச்சவாயன் தான்.
செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்? மனிதனுக்கு கால் இல்லன்னா பேலன்ஸ் பண்ண முடியாது.செல்போனில் பேலன்ஸ் இல்லன்னா கால் பண்ண முடியாது.
என்னதான் உங்க வீட்டு டிவி விடிய விடிய ஓடினாலும் அதால ஒரு இஞ்சு கூட நகரமுடியாது.
-Courtesy : www.priyatamil.wordpress.com
Wednesday, June 27, 2007
SMS Jokes
நான் சாஃப்ட்வேர்காரன், சாஃப்ட்வேர்காரன்
ரஜினிகாந்த் விஜயகாந்த் (பழைய எம்ஜியார் பாணியில்) ரிக்ஷாக்காரன், ஆட்டோக்காரன், பால்காரன் என்று எல்லாத் தொழில்களையும் செய்து நடித்துவிட்டார்கள். புரோகிராமர் சோகங்கள் தெரிந்தால், புரோகிராமராகவும் அவர்கள் நடித்திருப்பார்கள்.
இதுவரை நடிக்கவில்லையாதலால், ஆறுதலுக்கு டைட்டில் பாடலாவது பாடிப்பார்ப்போம்
***
நான் சாஃப்ட்வேர்காரன், சாஃப்ட்வேர்காரன்
நாலும் தெரிந்த பிஸி காரன்
மெயின்பிரேம்ல கோபால்காரன்
இண்டர்நெட்டில ஜாவாக்காரன்
கட் அண்ட் பேஸ்ட் வேலைக்காரன்
லாஜிக்குள்ள மூளைக்காரன்டா
நான் எப்பவுமே பாடி ஷாப்பர் உறவுக்காரன்டா
ஒய்டுகேன்னா அஜக்குத்தான்
ஒய்டுகேன்னா குமுக்குத்தான்
ஒய்டுகேன்னா அஜக்குத்தான்
ஒய்டுகேன்னா குமுக்குத்தான்
---( நான் சாஃப்வேர்காரன்..
ப்ராஜக்ட் பெரிசாச்சி
கோடு பெரிசாச்சி
பக்-கு எதிர்பார்த்து பாதி வயசாச்சி
ரிவியூ படிப்பதுக்கும் நேரத்திலே
ஈ-மெயில் விண்டோ ஓரத்திலே
ஒய்டுகேன்னா அஜக்குத்தான்
ஒய்டுகேன்னா குமுக்குத்தான்
ஒய்டுகேன்னா அஜக்குத்தான்
ஒய்டுகேன்னா குமுக்குத்தான்
---( நான் சாஃப்வேர்காரன்..
நான் ஹெச்-ஒன்னு இலவசமா போறேம்மா
உன் பிள்ளைக்கொரு
பி-ஒன்னு வாங்கித் தாரேம்மா
நம்பி வந்து பாரு
இது நம்ம சாஃப்வேரு
மைக்ரோசாஃப் புராடக்டு
விண்டோசுன்னு பேரு
நான் சாஃப்வேர்காரன்..சாஃட்வேர்காரன்
பேக்கெண்டில டிபிக்காரன்
ஃப்ரண்ட் எண்டுல விபிக்காரன்
ஓஎஸ்ஸில எண்டிக்காரன்
மைக்ரோசாஃப் மெளஸ்காரன்
இண்டெர்நெட்டில டிசிபி ஐபிக்காரன்
ஒய்டுகேன்னா அஜக்குத்தான்
ஒய்டுகேன்னா குமுக்குத்தான்
---
ஐஎஸ்ஓ ஆடிட்டில் ஆபத்தில் விடமாட்டேன்
சிஎம்எம் லெவல் 4ஐ மாட்டேன்னு சொல்லமாட்டேன்
அப்பப்போ போரு
அடிச்சாக்கா ஹாட்மெயிலு
அக்ஸெஸ் லைன் எல்லாம் டெடிக்கேட்டடு
ஒய்டுகேன்னா அஜக்குத்தான்
ஒய்டுகேன்னா குமுக்குத்தான்
-- நான் சாஃப்வேர்காரன்..சாஃட்வேர்காரன்